பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

அணுவின் ஆக்கம்


பீவாடிரான்கள்11 போன்ற நீண்ட பெயர்களைக் கொண்டுள்ளன. இவையாவும் அணுத்துணுக்குகளைத் துரிதப்படுத்தும் கருவிகள்12. இவற்றை அமைக்கக் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவாகும்.

அணுவின் உள்ளமைப்பில் பெரும்பகுதி குடுக்கைபோல் வெற்றிடமாக இருந்தபோதிலும், ரவைகளாகச் செல்லும் மின்னிகளில் பல தம் இலக்குகளைத் தாக்கிப் பல அணுக்களின் உட்கருக்களுடன் இணைகின்றன; அல்லது அவற்றைச் சிதைக்கின்றன. அணுச்சிதைவுக் கருவிகளில் ஏற்படும் அணு வெடிப்புக்கள் ஒலியின்றியே நடைபெறும். ஓர் எச்சரிக்கை மணியோசை அல்லது ஒரு மோட்டாரின் விர்என்ற சுழலோசை தவிர, வேறு ஒலியில்லாமல் எல்லா நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. அணூரவைகளேயோ, இலக்குகளினின்று சிதறிப் பறக்கும் அணுத்துணுக்குகளையோ கண்ணால் காண இயலாது. ஒரு வினாடியில் மிகச் சிறு கால அளவு மட்டிலும் நிலத்திருக்கக் கூடிய கட்புலகுகாத துணுக்குகளே கைகர்எண் - கருவிகளும் பிற கருவிகளும் எடை காண்கின்றன; அல்லது அவற்றின் வழிகளைப் படம் பிடிக்கின்றன. இவ்விவரங்களைப் பின்னர்க் காண்போம்.

தொடர்நிலை விளைவு13 : யு - 285-ன் கருவினை ஒரு பொது இயல் மின்னி கொண்டு தாக்கினால், அது என்ன ஆகிறது? அது சிதையும். ஆற்றலும் வெளிப்படும். ஒர் உட்கரு சிதைவுற்றல் சுமார் 200 மில்லியன் எலக்ட்ரான் வோல்ட்டு (மி. எ. வோ) ஆற்றல் வெளிவரும். எவ்வளவு ஆற்றல் வெளிப்படும் என்பதைக் கண்டறிய ஐன்ஸ்டைன் கூறிய மந்திரம் பயன்படுகிறது. E=mc2 என்பது அவர் கூறிய மந்திரம். இதில் E என்பது ஆற்றல் m என்பது பொருண்மை; c என்பது ஒளியின் வேகம்; இது வினாடிக்கு


11 பீவாடிரான்கள் - bewatrons. 12அணுத்துணுக்குகளை துரிதப்படுத்தும் - particle accelerators. 13 தொடர்நிலை விளைவு - chain reaction.