பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கருவிலடங்கிய ஆற்றலும் தொடர்நிலை விளைவும்

61


கட்டுப்படுத்த ஆங்காங்குக் காட்மியம்27 கோல்களும் செருகப்பெறும். காட்மியம் பொது இயல் மின்னிகளே உட்கவரும் தன்மையது. ஆகையால், இக்கோல்களே உள்ளே தள்ளியும் வெளியே இழுத்தும் பிளவை நிகழ்த்தும் பொது இயல் மின்னிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி விளைவு தேவையான வீதத்தில் நிகழுமாறு செய்யலாம். விளைவின் பொழுது ஏராளமான வெப்பம் தோன்றும். இதை அகற்ற அலுமினிய உறைகளுக்குள் குளிர்ந்த நீரைச் செலுத்தி அது அடுக்கைச் சுற்றிவருமாறு செய்வார்கள். இவ்வாறு கட்டுப்பாட்டுடன் இயங்கும் அணு அடுக்கு அனுப்பிளவிள் தோன்றும் ஆற்றலைப் பயனுள்ள வடிவில் மாற்றவோ, கதிரியக்கமுள்ள ஓரிடத்தான்களே உற்பத்தி செய்யவோ, உட்கருவினைகளைத் தூண்டவோ பயன்படும். இதனால் விளையும் ஆற்றலைக்கொண்டு யு-238ஐ புளுட்டோனியமாக மாற்றலாம். இந்தப் புளுட்டோனியம் வேதியல் முறைகளில் பிரித்தெடுக்கப்பெறுகின்றது.

புளுட்டோனியத்தைத் தயாரிக்கும் அடுக்குகளில் இயற்கை யுரேனியம் பயன்படுகின்றது. வலிவான நேர் இயல் மின்னிகள் பெரிலியம்28 போன்ற ஒரு தனிமத்தைத் தாக் கில்ை பொது இயல் மின்னிகள் வெளிவருகின்றன. இவை அடுக்கிலுள்ள யுரேனியத்தைத் தாக்குமாறு செய்யப்படும். யுரேனியம் பிளவுற்று விரைவான பொது இயல் மின்னிகள் தோன்றுகின்றன. தணிப்பான் அவற்றின் விசையைக் குறைக்கின்றது. யுரேனியக் கோல்களின் அமைப்பும் தனிப்பானின் அளவும் மிகத் திருத்தமாக முன்கூட்டியே கணக்கிடப்பெறுகின்றன. பொது இயல் மின்னிகளில் பெரும் பான்மையானவை யு-238ல் பதிந்து தொடர்நிலை விளைவு தடைபடாதிருக்கவும், அவை அதிகமாகப் பிளவில் ஈடுபட்டுக் கட்டுக்கடங்காத விளைவு உண்டாகாதிருக்கவும் பொது இயல் மின்னிகள் சீரானவிகிதத்தில் தோன்றி மறையுமாறு செய்யவேண்டியது இன்றியமையாததாகின்றது.


27 காட்மியம் - cadmium 28 பெரிலியம் - beryllium