பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. அணு எரியைகள்


வெப்பத்தை இயற்றுவதற்கு விறகு, கரி, நிலக்கரி, எண்ணெய் போன்ற சில எரியைகளைப் பயன்படுத்துகின்றோம். இதைப் போலவே அணுவாற்றலே இயற்றுவதற்கு அணு எரியைகளே உபயோகிக்கின்றனர். யுரேனியம், தோரியம் ன்ன்ற இரண்டு வேதியற் தனிமங்கள் அணு எரியைகளாகப் பயன்படுகின்றன. இயற்கையில் கிடைக்கும் இவ்விரண்டு தனிமங்கள்தாம் அவ்வாறு பயன்படுகின்றன. அவற்றின் அணுக்கள் மிகக் கனமானவை; அவற்றின் அமைப்பும் மிகவும் சிக்கலானது. அவை இரண்டும் சிறிது கதிரியக்கமுள்ளவை1. அஃதாவது, அவற்றின் உட்கருக்கள் பல நூற்றாண்டுகளில் எதிர் மின்னிகள், நேர் இயல் மின்னிகள், பொது இயல் மின்னிகள் என்ற சிறு சிறு துணுக்குகள் ஒவ்வொன்றாக எறிந்து இறுதியில் ஈயமாக மாறுகின்றன. பூமியில் யுரேனியத்தை விட கனமான அணுக்கள் இருக்குமாயின், அவை நிலையற்றவையாகவே காணப்பெறும்; அவை நாளடைவில் சிதைந்து அழிந்துகொண்டே வந்து இறுதியில் நிலத்த தன்மையுள்ள ஈயம் போன்ற சாதாரணத் தனிமங்களாக மாறிவிடும்.

அணு எரியைகளின் மூலங்கள்: மனிதன் பயன்படுத்தும் எல்லாப் பொருள்களைப் போலவே அணு எரியைகளும் பூமியிலிருந்தே கிடைக்கின்றன. ஏனையவற்றைப் போலன்றி இந்த எரியைகள் தம் இயற்கை நிலையிலிருந்து பல்வேறு


1 கதிரியக்கமுள்ள - radioactive.