பக்கம்:அண்டகோள மெய்ப்பொருள்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

•10 அண்டகோளமெய்ப் பொருள்


"பாரிடமாவானுந் தான்"(சஉ) என்னும் பெரியதிருவந்தாதித் தொடர்க்குப் பெரியவாச்சான் பிள்ளையாசிரியர் "ரக்ஷ்ய ரக்ஷக பாவாதி ஸ்ம்பந்தத்தால் ஐக்யம்;ஸ்வரூபத: அன்று" என் றுத்தவாற்றன் உணர்க. ரக்ஷகத்வத்தை இனிது நிறைவேற்றவே எங்குங்கலந்துறைதலை டேற்கொண்டனன் இறைவன் என்ப.

3. ஈருயிர் மருங்கின் ஆருயிர் தொகுத்து என்புழி, ஈருயிர் மருங்கின் என்பது இருவகைப்பட்ட உயிர்களின் பக்கத்தில் எ-று

மோக்ஷந்தத்திற்கு உபகாரமாகிய தெய்வ ஸம் பத்தையுடைய உயிர் என்றும், ஸம்ஸார பந்தத்திற்கு உபகாரமாகிய ஆஸுரஸம்பத்தை யுடைய உயிரென்றும் வகுக்கப்பட்ட இருவகை உயிர்களின் பக்கலில் என்று கொள்க. ஸ்ரீகீதை பதினாறாம் அத்யாயத்தில் "இவ்வுலகிற் பிராணிகளின் ஸ்ருஷ்டி, தேவர்களின் ஸ்வபாவ முள்ளதென்றும், அஸுரர்களின் ஸ்வபாவமுள்ளதென்றும் இரு வகைப்படும்" என்று பகவான் அருளிச்செய்ததை ஈண்டைக்கு நோக்கிக் கொள்க. இனி ஈருயிரென்றது ஸ்ரீகீதை ஏழாம் அத்யாயத்தில் பகவானைத் தொழாரும் தொழுவாரு மாகிய "துஷ்க்ருதிந: ஸுக்ருதிந: என்று கூறப்பட்ட இரு வகை உயிர்களை எனினுமாம். தொழாராகிய துஷ்க்ருதிகள் நராதமர், மாயை கவர்ந்த மதியினர், அஸுரஸ்வபாவ முள்ளவர், மூடர் என நால்வகையினர் எனவும், தொழுவா ராகிய ஸுக்ருதிகள் ஆர்த்தன், ஜிஜ்ஞாஸு , அர்த்தார்த்தி, ஞானி என நால்வகையினர் எனவும், இவருள் ஞானி அத்யர்த்த ப்ரியனான மேன்மையனெனவும், அப் பெருந் தகையோன் கிடைத்தற்கரியோனெனவும், அவனே ஸர்வம்