பக்கம்:அண்டகோள மெய்ப்பொருள்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்டகோள மெய்ப்பொருள் 13 பாவனையாலடைந்தவர்; பொறிகளால் வேறொன்றும் துய்க்காதவரும், உண்ணாதவரும், அசைவற்றவரும், நறுமணங்கமழ்பவரும், ஏகாந்திகளு மாவர்” என வருவனவற்றாலறிக. இந்த த்வீபத்திற்கு நாரதமஹருஷியானவர் தெய்வகிருபையாற் சென்று ஈங்குள்ள அநிருத்தமூர்த்தியைப் பலபடியாக ஸ்துதித்ததும் பரமைகாந்திகளைத் தரிசித்து ஆச்சரியமடைந்ததும் பிறவும் அப்பருவத்தே கண்டு கொள்க: இதனை வைகுண்டமாகவும் உபசரித்து வழங்குவர். ச்வேதத்வீபம் = வைகுண்டம் என்று ஸ்ரீபாகவதத்தில் ஸ்ரீதர ஸ்வாமிகள் வ்யாக்யானமிட்டார். - இனி ஸஹஸ்ரநாம த்யானசுலோகத்தில் க்ஷீரோகந் வத்ப்ரதேசே' என்பதில் திருப்பாற்கடல் வடகரையில் மணி விளக்கெடுக்கும் மணற்பரப்பில் நித்திலமாலையணிந்த அணையில் இம்மூர்த்தி எழுந்தருளி இருப்பது கூறுதலான், அதற்கியைப நித்திலப் பரப்பில் எனவும் அன்ன வெண்மணற் பரப்பில் எனவும் கூறினு மமையும். அன்ன வெண்மணல் = அத்தகைய வெண்மணல். 5. வேரும் வித்தும் இன்றி=தான் நிலைபெறுதற்குக் காரணமான மூலமும், தானுண்டாதற்குக் காரணமான பீஜமும் தானேயன்றி வேறில்லாமல் எ-று. . வினைகளையே வேராகவும், அவ்யக்தத்தை வித்தாகவும், பிறவிகளைக் கிளைகளாகவுங் கொண்ட ஸம்ஸார வ்ருக்ஷத்தின் (ஸ்ரீகீதை; விஷ்ணு புராணம் எ-ஆம் அத்யாயம்) இது வேறாய பரப்ருஹ்மவ்ருக்ஷம் என்பதுதோன்ற வேரும்வித்தும் இன்றி என்றார். எல்லாப் பொருட்குந்தானே வேரும் வித்துமாகுமென்றவாறு. இத்தன்மையை,