பக்கம்:அண்டகோள மெய்ப்பொருள்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

= அண்டகோள மெய்ப்பொருள் 15. கடற் பள்ளியம்மானை' எனத் திருவாய்மொழியில் (8,4,6,) வருதலான் இதனுண்மை யுணர்க. ஆண்டு, ஈட்டில் நம்பிள்ளையாசிரியர், இத்திருப்பாட்டின் கருத்தொடு பொருந் தவே "ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனான தன்னாலுந் தன்னைப் பரிச்சேதிக்கப் போகாது ச்வேத த்வீபவாசிகள் ஆச்ரயிக்கைக்கு திருப்பாற் கடலிலே கண்வள ர்ந்தருளினவனை" என வ்யாக்யானமிட்டது காண்க. இனி யஜுர்வேத காடகத்தில் த்வமேவத்வாம் வேத்த ----------(을 eெவதாவெதயொவலிவொவலி) (நீ யாராயுள்ளனை அவனாயுள்ளனை யென்று நின்னை நீயே யறிகிற்பை) எனவும், ஸ்ரீகீதையில் (10-15) நீ நின்னை ஸ்வயமாகவே நின்னறிவால் அறிகின்றன” எனவும், பரிபாடலில் (8):நின்னைப் புரைநினைப்பி னீயல துணர்தியோ நின்னே உயர்வுகூறக் கருதின் அது நீயே யுணரினல்லது பிறராலுணரப்படுதியோ (பரிமேலழகருரை)-எனவும் வருதலான் ஈண்டுத் தானே தன்னிலையறியா என்பது தன்னியல்பு தானே யறிந்து எனக்கருதினரெனினு மிழுக்காது. இதற்கு அறியா மிகு மரம் என இயைக்க. இவ்வாறு பிறர் அறியா மைக்குக் காரணமிவையென தொன்மிகுபெருமரம் என்று இப் பரப்ரும்ஹ வ்ருக்ஷத்தை விசேடிக்குமாற்றால் விளக்குகின்றார் 6. தொன்மிகு பெருமரம் என்பது அநாதியே மிகுந்த பெரிய பரப்ருஹ்மமாகிய வ்ருக்ஷம் எ-று. காலத்தாலும் தேசத்தாலும் வஸ்துவாலும் பரிச்சேதிக் கப்படுவதொன்றன்றே ஒருவர்.அறிவிற்கு விஷயமாவது? இஃது அம்மூன்று பரிச்சேதமும் கடந்துள்ளதென்று இவ் விசேடணங்களாற் கொள்ளவைத்தவாறாகும்.தொன்மரம் என்ற தல்ை காலவளவையைக் கடந்ததென்றும், மிகுமரம்