பக்கம்:அண்டகோள மெய்ப்பொருள்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

16 அண்டகோள மெய்ப்பொருள் என்றதனால் தேசவளவையைக் கடந்ததென்றும், பெருமரம் என்றதனால் வஸ்து அளவையைக் கடந்ததென்றும் தெளிவித்தது கண்டுகொள்க. ப்ருஹத் ரூப:' என்னும் திருநாமம் பற்றிப் பெருமை வஸ்துபரிச்சேதங் கடந்த தக்கு ஆயிற்று இனைத்தென வெண்வரம்பறியா யாக்கையை” என்பது பரிபாடல். இதற்குப் பரிமேலழகர் இனைத்தென எண்ணும் எண்ணிற்கு எல்லை யறியப்படாத வடிவினை யுடையை' என்றுரைத்தலா. னறிக. இக்காலத்ததென்றும், இவ்விடத்ததென்றும், இப்படித்தென்றும் அறியலாகாத தென்று குறித்ததெனக்கொள்க. மரம் என்பது உவமையாற் போந்த பெயர் : தன்னடி நீழலிற் புக்கார் பயன் றுய்த்து வாழநிற்கும் மரம்போலுதலான் இறைவனே மரமாக்கினர். அருஞ்சுரத்து மரம் போல அடைந்தார்க்களித்தல் அவற்கியல்பு' என்பர் நச்சினார்க்கினியர் (சீவகசிந்தாமணி,3). வாஸுதேவதரு'என்ப. வ்ருக்ஷ:என்பது, இறைவன் ஆயிரநாமத்துளொன்றாதல் காண்க.ஸ்ரீபராசரபட்டர் உயிர்கட்கு ஜீவனமாகி அவ்வுயிர்கள் தனக்கிழைக்கும் அபராதங்களைப் பொறுத்து நிற்றலான் மரம்' என்று பெயராயிற்றென்றார். மூன்றுலகிற்கும் நிழல் செய்தலான் இறைவன் பூர்ப்புவஸ்வஸ்தரு ' (ஹகுஹ-வே இெ ஜா)என்ற பெயர்சிறப்பன் என்பதும் அவ்வாயிர நாமத்தே கண்டது. ப்ரமானங்களிற் றலைசிறந்த வேதம் வ்ருக்ஷஇவ ஸ்தப்தோ திவிதிஷ்டத்யேக:'(வரக?. \ ^ .T - வடிெ o ெ i | גר: உவ வல்லெவா . விவி திடிெ த)க ெெதடதாரிய ഇ.ഒ.) என்று முழங்கிற்று. ஒருவன் மரம்போல அசையாது திவ்ய லோகத்திலுள்ளானென்பது இதன்பொருள். வால்மீகி பகவானும் தாரைக் கூற்றால் நிவாஸ வ்ருக்ஷஸ் ஸாதுநாம். (நிவாவஆரக்ஷஜாலஅா) (ஸாதுக்களுக்குப் புகலிட மான்மரம்) என்று பெருமாளைக் கூறினான். ப்ருஹ்மதரு'