பக்கம்:அண்டகோள மெய்ப்பொருள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

| S அண்டகோள மெய்ப்பொருள் மத்தியிலே......... நித்திரைகொள்ளுங் தமாலத்துருவன்' (அழகர் கலம்பகக் காப்பு) எனப் பாடியதனையுங் காண்க. மஹாபாரதம் சாந்திபர்வத்தில் நாரதமஹருஷி ச்வேத த்வீபஞ் சென்று இம் மூர்த்தியை ஸ்துதித்த ஸ்தோத்திரத்தில் "வநஸ்பதயே நம:" (வனங்கட்குப் பதியாகிய பெருமரத்திற்கு நமஸ்காரம்) என வருதலும் ஈண்டு நினைக்கத்தகும். "மனிசரு மற்று முற்றுமாய்" என்னும் திருவாய்மொழி யீட்டில் "தடங்கடற் சேர்ந்த பிரானை' என்புழி நம்பிள்ளை ஆசிரியர்-திருப்பாற் கடலிலே அநிருத்த ரூபியாய்க் கொண்டு கண்வளர்ந்தருளுகிற இடம் அவதார கந்த மிறே (அவதாரங் கிளைத்தற்குரிய கிழங்கு) " வெள்ளத்தர விற் றுயிலமர்ந்த வித்திறே" என்று அருளிச்செய்ததனையும் ஈண்டைக் கேற்ப நோக்கிக்கொள்க. ப்ரச்நோபநிஷத்தில் ஒரு விருக்ஷத்திற் பல பறவைகளுந் தங்கியிருத்தல்போல உலகெல்லாம் பரமாத்மாவினிடத்துத் தங்கியிருப்பன ' என்பதனால் இஃது உவமையாற் போந்த பெயரென்பது அறியப்படும். விஷ்ணுபுராணத்தும், மகாவிஷ்ணு விருக்ஷம் என்றும், ஸ்ரீதேவி. அதன்கட் படர்ந்த கொடி என்றும் பராசரபகவான் அருளிச் செய்தான் (1, S). மரம் தன் பழத்தைத் தானுண்ணாது தன்னையடைந்த உயிர் உண்ணநிற் றல்போல இறைவனுண்மை உணர்ந்துகொள்க. பெருமரம் என்புழிப் பெருமை தான் பெரியதாயிருப்பதனாலும், தன்னையடைந்ததைப் பெரிதாக்குதலாலும் உள்ளது என்பர். இதனை விஷ்ணுபுராணத்தில் ப்ருஹ்மசப்தத்திற்கு ஸ்ரீபராசர பகவான் பெரிதாதலானும் பெரிதாக்குதலானும் ப்ருஹ்மம் என்று அறியப்படுவது என்று கூறியதனாலும் உணர கந்தம்-கிழங்கு. அவதார கங்கம்-அவதாரமூலம். கந்தம் மூலம் கிழங்கு மூன்று மொருபொருளன.