பக்கம்:அண்டகோள மெய்ப்பொருள்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அண்டகோள மெய்ப்பொருள்.

மற்றுமோர் தெய்வம் வழிபடா வேகாந்தம் சொற்றவதி காரிகட்குச் சூழ்பொதுவாம்'(மொழிபெயர்ப்பு) * என்ற திருவுளம்பற்றினார். முப்பழம்-ஐச்வர்ய சுகம், கைவல்ய சுகம், மோக்ஷசுகம் என்ற மூன்று கனிகளை எ- று. இம்மூவகையை 'ப்ருஹ்மணோஹி ப்ரதிஷ்டாஹம்" (மூ ஹணொஹிமூ ചിട്ലം) என்னுங் கீதையின் பாஷ்யத்திற் காண்க. இறவாதுவி காரம்மிலை யாகும்பிர மத்திற் கெவ்வேதுவின் யான்றங்கிட னவ்வேது வினழியா அறனால்விளை தற்கும்மொரு முடிபேதுணி புடையா றடையின்ப மதற்குந்நிலை யிடனாகுவ லம்மா ?” என்பது கீதைப்பாடல். முறைமுறை-அவரவர் அர்த்தித்த கிரமங்களில் எ-று. அதிகாரியும் பலராய் அவர் விருப்பமும் பலவாதலின் முறைமுறை என்று அடுக்கினர். 'மறைமுறையால் வானாடர் கூடி-முறைமுறையின் தாதிலகு பூத்தெளித்தா லொவ்வாதே' (பெரியதிருவந்தாதி-61) என்பது போலக்கொள்க. முறை என்று நூற்குப் பெயராத லான் முறை முறை என்பதுதான்முறை யென்றல், அவ னிட்டவழக்கு சாஸ்த்ரம் என்பதாகாது சாஸ்த்ரமிட்ட வழக்கிலே அவன் தருவதாய் இறைவனுக்குத் தலைமை கூறாது சாஸ்த்ரத்திற்கே அவனினுமிகுத்துத் தலைமை கூறுவதாக முடியும். அன்றியும் சாஸ்த்ரம், பரதெய்வத்திற்கும் அதன் செயற்கும் ஞாபகவே துவல்லது காரகவேது ஆகாமையு முணர்க.ே சாஸ்த்ரத்திற்கும் பரதெய்வம் எட்டா

  • வாய்மொழியோடை மலர்ந்த தாமரைப்பூ என வரும் பரி பாடலிற் பரிமேலழகர் தாமரைப்பூ படைப்பிற்கு முதலாகவந்து மலரும் என்பதற்கு வேதம் ஞாபகவே துவாதலின்’ என வுரைத்தது

காண்க.