பக்கம்:அண்டகோள மெய்ப்பொருள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்டகோள மெய்ப்பொருள் 25 பிடையே நின்றும்" என்பதனையே கல்லின் எழுந்து என்பதனாற் கூறினார். 'கல்லுங் கனைகடலும் வைகுந்த வானாடும்' (பெரிய திருவந்தாதி,68)என்புழிக் கல் என்பது பொருப்பாதல் காண்க, 'வடபெருங்கல் எனப் புறப்பாட்டிலும் இமய மலையைக் கூறுதல்காணலாம். புனற்குளித்து மென்பதனேயே 'கடலினழுந்தி' என்று கூறிக்காட்டினர். தீர்த்தங்களிற் றலை சிறந்ததாகலின் கடலைக்கூறினார். 'நீண்டதோள் மால்கிடந்த நீள்கடனீரா டுவான்,பூண்டநா, ளெல்லாம் புகும்' (மூன்றாந் திரு.69)என்றட பாசுரத்தால் இதன் உயர்த்தி நன்குணரலாம். அழுந்தல்-மூழ்குதல்.நீரற என்பது பசையற உணக்குதலாதலான் நெருப்பிடை நிற்றல் கூறினார். பரமைகாந்திகள் வேண்டாவென்று தள்ளியவற்றை இப்பெத்தாத்மா ஐச்வர்யகாமனாய்ச் செய்தொழுகுமாறு கூறப்பட்டது. 'நீரற 'என்பது பசையறவுணக்குதலைக் குறிப்பதாதல் 'முழூஉவள்ளுர முணக்குமள்ள' (புறம்.219) என்று கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்தானே நல்லிசைப் புலவர்பாடியதனான் நன்கறிய லாகும். ஐச்வர்யகாமன் பல்வகைக் கர்மங்களையே தலையாகக் கொண்டு காயம்வாட்டுதலை 'படிமன்னு பல்கலன் பற்ரறோடறுத் தைம்புலன் வென்று செடிமன்னு காயஞ்செற்றார்களா மாங்கவனை யில்லார் குடிமன்னு மின்சுவர்க்க மெய்தியு மீள்வர்கள் ' எனவருந் திருவாய்மொழியா னுணர்க. (4, 1, 9) விளைக்கும் செறிபொழிற்குப்பை தருகட்பு-(அறுகாற்கு உறவன்) இவ்வாறு எழுந்து அழுந்தி நீர் அறுதலான் அவற் றின் பயனுக விளைக்கின்ற செறிந்த கற்பகச்சோலை உதிர்த்த குப்பைகள் தரும் வஞ்சம் எ-று. பொழில் என்றது, கற்பக முதலிய ஐந்தருக்களுள்ள சோலையாதலான். இதனைக் கற்பகச்சோலை என்பது தலைமையான வண்மைபற்றி. ஈண்டுக் கூறிய இந்திரச் செல்வம்,