பக்கம்:அண்டகோள மெய்ப்பொருள்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

.26 அண்டகோள மெய்ப்பொருள்

'இன்றளிர்க் கற்பக நறுந்தேனிடைத் துளிக்கு நிழலிருக்கை' என்பதும் அதுவும் 'அவ்வைந்தருச்சோலை யுதிர்த்ததென்பதும், நல்லறிவாளர் கண்டுகைவிட்ட மயல் (துரால்) என் பதும் தோன்றச் செறிபொழிற் குப்பை என்றார்.'குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை' என்பது இவர் திருவாக்கு. இது, நல்கிய இறைவனை ஆங்கு மறப்பித்தலானும் புண்ணிய கர்மம் நசித்து மண்ணிடைத் தோன்றியவிடத்தும் அச்செல்வத்திற்கே வாசனையால் முயலச்செய்தலானும் 'குப்பை தரு கட்பு' என்றார். கட்பு-களவு, வஞ்சம் எ-று. செல்வம் வந்துற்ற காலைத் தெய்வமுஞ் சிறிது பேணார்" என்ப. (பாரதம்) 'வியன்மூவுலகு பெறினும்போய்த் தானே தானே யானாலும்' (திருவாய்மொழி. 8-10-2) என்று ஐச்வர்ய கைவல்யங்களைக் கூறியவிடத்து ஐச்வர்யார்த்தி மூவுலகும் அருமையிற் பெறுதல் கூறியதேனும் ஈண்டுத் தலைமைபற்றி இந்திரச் செல்வமே கருதினரெனக்கொள்க. இனி இதற்கே வேறோருரை கூறுதும். அறுகாற்கு உறவன் என்புழி அறுமீனுய்க் கால்வடிவாகவுள்ள உரோ கிணிக்கு உறவுபூண்ட சந்த்ரன் எ-று. உரோகிணி ஆறாய்ச் சகடம் எனப்பெறுதலும் சந்த்ரனுக்கு அதிகப்பிரியை யாதலும் நூல்களிற் காணலாகும். இஃது அறுமீன் எனவும் பெயர் பெறுமென்பது அறுமீனினைவனள்" என வரும் அகநானூற்றின் குறிப்பில் : அறுமீன் - உரோகிணி' எனக் கூறியதனானறிக. கால்-உருளை. 'சகடக்கால்' (நாலடி) எனவும் 'கால்பார்கோத்து ஞாலத்தியங்கும்'(புறம். 185) எனவும் வருவன காண்க. வ்ருஷப வீடு சந்த்ரனுக்கு உச்ச ஸ்தானமாதலின் ஆண்டுள்ள உரோகிணியின்பால் அவன் மிகவும் உறவுள்ளவனாயினன் என்பர். ரோஹிணீசன் ரோஹிணி நாயகன் என்பன சந்திரன் பெயர்களாகும்.