பக்கம்:அண்டகோள மெய்ப்பொருள்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 27 அண்டகோள மெய்ப்பொருள்

இவன் நீரற என்றது, இவன் உடலமிழ்தத்தைத் தேவர் பருகலான் இவன் அமிழ்தம் அற என்றவாறாம்.இவ்விதம் சந்த்ரன் அமிர்தமயமாய்க் குளிர்ந்த ஜலபரமானுக்களாலே சுக்ல பக்ஷத்தில் தேவர்களையும் கிருஷ்ண பக்ஷத்தில் பிதுர்க்களையும் திருப்தி செய்கின்றான் என்று புராண ரத்னம் கூறுதலை நோக்குக.(விஷ்ணுபுராணம் 2-12). இத் தேவர்வளர்ச்சிக்கு ஒருவன் உடல் தேயவேண்டுவ தென்று குறித்தவாறாம். இனிக் கல்லினெழுந்து கடலின் அழுந்தி என்பதனைக் கடலினழுந்திக் கல்லினெழுந்து என மாறிக் கூட்டுக. சிந்தாமணிப் பதிகத்திற் 'குணமாலையை வைதுமாறி ' என்ப தனை மாறி வைது என மாறிக் கூட்டியதுபோல ஈண்டுங் கொள்ளற்பாலது ; இவ்வளர்ச்சியும் நிலைபேறுடையதில்லை யென்று இதிகாசங்காட்டியது இஃதென்க. இவ்விந்திரச் செல்வம் துர்வாஸ முனிவர் சாபத்தாற் கடலினழுந்தி மந்தர மென்னுங் கல்லானெழுந்து சந்த்ரன் நீரற விளைக்கும் செறிபொழிற்குப்பை என்றவாறாம். சந்த்ரன் விளைக்கும் பொழில் என்க. சந்த்ரன் தன் அமிழ்தம் அறா நிற்கவும், விளைக்கின்ற கற்பகச்சோலை எ - று. ஒஷதீசன் சந்த்ரனாதலான் அவன்விளைக்கும் பொழில் என்றார். இச் செல்வம் சந்த்ரன் விளைப்பதென்றாலும் இழுக்காது; என்னை யெனிற் கூறுவேம். வீடு புகுதற்குரியது அர்ச்சிராதிகதி யென்றும் சுவர்க்கம் புகுதற்குரியது தூமாதிகதி என்றும் வேதம் கூறும். இவ்விருகதிகளுள் ஐச்வர்யார்த்திகள் புகும் தூமாதிகதி, முதலிற் சந்த்ரனிடம் புக்கு அப்பாற் சுவர்க்கம் போகும் முறைமைத் தாதலின் 'சாந்த்ரமஸம்' என்று வழங்கப்படும். இச்செல்வம் திங்களாகிய உண்டியால் அமைவதனாலும் இதனுண்மை யுணர்க. பரிபாடலில், 'நிறைமதி யுண்டி யமரர்க்கு" எனவும், அமரருண்டி மதி'