பக்கம்:அண்டகோள மெய்ப்பொருள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 அண்டகோள மெய்ப்பொருள்

ஜகத் ச்ருஷ்டி செய்பவன் எ-று. விளைக்கும் நாடன் என்பதனை நாடுவிளைப்பவன் என்றுகொள்க; செய்த வேள்வியர்' (திருவாய் 5,7,5) என்பதனை வேள்வி செய்தவர் என்று கொள்வதுபோல. இவ்வழக்கு வடநூலிலே மிகவும் பயில்வதொன்று பெருந்தமிழ்நூல்களிலும் ஆங்காங்குக் காணலாம் காடு விளைப்பவன் - உலகு படைப்பவனாகிய பிரமன். நாடு உலகிற்காதல் 'காட்டைப் படையென் றயன்முத லாத் தந்த' என்னும் நாச்சியார் திருமொழியால் (14, 9) அறிந்துகொள்க. இறைவன் ஆணையாற் பிரமன் நாடு விளைப்பது இம் மூன்று பெரும்பலன்களுள் ஒன்றேனும், உயிர் கட்கு ஆமாறன்றி வேறில்லை யென்பது கருத்தாகும். ஸ்ரீமத் பாகவதத்தில் (11–3–7) 'ஆதிமூர்த்தி ஜீவனுக்கு உயர்ந்த ஸித்தி உண்டாம்பொருட்டுப் பூதங்களாற் பிராணி களைப் படைத்தான்' என வருதலானும் உணர்க. 'உய்யவுலகு படைத்து ' எனப் பெரியாழ்வார் திரு மொழியிலும் (1, 6, 1) 'படைத்திட்ட திவ்வைய முய்ய முனநாள் பணிந்தேத்த வல்லார் துயராயவெல்லாந் துடைத்திட்டவரைத் தனக்காக்கவென்னத் தெளியா? எனப் பெரியதிருமொழியிலும் (10, 6, 7) வருதல் கொண்டு இவ்வுண்மை அறிக. உயிர்கட்கு அநுகூலிக்கவே உலகு விளைப்பதல்லது ப்ரதிகூலிக்கவில்லையென்பது கருத்து. இங்ஙனம் மாக்கதிக்கணாமாறு நாடு விளைப்பவனாகவும் 'என்னொருவர் தீக்கதிக்கட் செல்லுந்திறன்" எனப் பெரியோரிரங்குதலான் இஃதெளிதிலறியலாம். தீக்கதி புகுவது உயிர்கள் தம் தீயவினையால் என்றறிக.