பக்கம்:அண்டகோள மெய்ப்பொருள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்டகோள மெய்ப்பொருள் 31

நாவாயி லுண்டே நமோநார ணாவென்று ஒவா துரைக்கு முரையுண்டே-மூவாத மாக்கதிக்கட் செல்லும் வகையுண்டே யென்னொருவர் தீக்கதிக்கட் செல்லுங் திறன்’ (முதற்றிருவந்தாதி, 95) என்னும் பாசுரம் நோக்கிக்கொள்க. வாய் படைக்கப்பட்டுள்ளது; அதன்கண்ணே நாப் படைக்கப்பட்டுள்ளது; நாரணா என்றுரைக்கும் உரை நித்யமாகவுள்ளது. இந்நாவையும் இத் திவ்ய நாமாவையுஞ் சேர்த்தால் மாக்கதிக்கட் செல்லவகை யுண்டே' என்றோதியவாறாம். ஈச்வரன் உடம்பைப் படைப்பது பந்தம் ஒழிப்ப தற்கேயன்றி வேருென்றற்கில்லை யென்பது. 'ஆப்பங்கொழியவும் பல்லுயிர்க்கும்-ஆக்கை கொடுத்தளித்த கோனே குணப்பரனே யுன்னே விடத்துணியார் மெய்தெளிந்தார் தாம்' (நான்முகன்றிருவந்தாதி, 93) என்பதனைறியலாம். இத்துணையுங் கூறியவாற்றால் படைப்பவன் உலகு விளைப்பது, உயிர்கள், முற்கூறிய மூன்று கதிகளிலும் ஆமாறல்லது நரகிற்போமாறில்லையென்று துணிந்து கொள்க. 13. அவனே தலையிலி என்பது உலகு விளைப்பவனாகிய அப்பெரியோனே தன் தலையிழந்தவனாயினான் எ-று. நாடன் என்பதன்பின் அவனேயென அடுத்து வேண்டாத சுட்டுச்சொல் வந்தது, முன்னே எல்லாருடைய தலை களையும் தன் தலைகளையும் படைப்பவன் அவனே பின்னே தலையி ல்லையாயினான் என்று குறிக்கொள்ளுதற்கென அறியலாம். சிந்தாமணிப் பதிகத்தில்(4) தேவி போகி.... சுடுகாடவள் சேர்ந்தவாறும் ' என்புழி "தேவியவள்" என வந்தது. முன்னே இன்னமிழ்தாயினவள் பின்னே இங்ஙனன் சுடுகாடுபுக்காள் என உணர்த்தற்கு என்பதுபோல இதனையுங்கொள்க.