பக்கம்:அண்டகோள மெய்ப்பொருள்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 அண்டகோள மெய்ப்பொருள்

பிரமன் பலதலை படைத்துக்கொண்ட செய்தி மத்ஸ்ய புராணம்-௩ஆம் அத்யாயத்திற் (80-41) கண்டது. ஆண்டு இவன் தன்னுடம்பிற் றோன்றிய சரஸ்வதியைக் கண்டு காமித்தான் என்றும், இவனைக்கண்டு ஒவ்வோர் திசையிலும் அவள் ஒதுங்கினாள் என்றும், ஒதுங்கியதிசையெல்லாம். இருந்த படியே தலையைப் படைத்துக்கொண்டு நோக்கினா னென்றும், அதுகண்டு ஸரஸ்வதி வானம் புகலாயினள் என்றும், அவள் வான்புகுதலைக் காண உச்சியில் ஐந்தாந்தலை படைத்து நோக்கினான் என்றும், இவ்வாறு ஐந்தலையன் ஆயினானென்றும், ஐந்தாந்தலையைச் சடைகளான் மறைத்திருந்தா னென்றும் கூறுதல் காணலாம். இவன் ஐந்தலை வரலாறு இப்புராணங் கூறுதல் கொண்டு, இவன் முதற் கண்ணே நான்கு மில்லானாயிருந்தானென்று உய்த்துணரலாகும்

"கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் (குறள், 110 ) ஐம்பொறியுமுள்ள உத்தம அவயவம் இல்லான் என்றது, இவன் காமபோகந்துய்த்தற்கேற்ற உறுப்பே இல்லையாயினன் என்பது கருதிற்று.'ஐம்புலனு மொண்டொடிகண்ணே யுள' என்பது திருக்குறள் (டிை). பின் பிரமசிரசு கிள்ளப் பட்டுச் சிவபிரான் கைய்து ஆயிற்று எனப் பன்னூலினுங் கேட்கப்படுதலான், தலையிலி என்றார். கபாலநன் மோக்கக் துக் கண்டு கொண்மின்' (திருவாய்மொழி. 4-10-4) என் புழி, நம்பிள்ளையாசிரியர் ஒருவன் தலைகெட்டு நின்றான்” என்று உரைத்ததனாலும் தலையிலி'யாதலுனர்க; வாணன் கையிழந்து நின்றான்' என்பதுபோல இதனையும் கொள்க. இவனைப் பரமேஷ்டி, சுவயம்பூ என்பதுபற்றித் தன்னிற் றலைமை வேறில்லானென்று பொருள் கொள்ளலா மேனும், பின் முலையிலி என்று உறுப்புப்பற்றி வந்தத தனோ டொருபடித்தாய் இயைபுள்ளதாகாமை யுணர்க.