பக்கம்:அண்டகோள மெய்ப்பொருள்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அண்டகோள மெய்ப்பொருள் 33.

ஜகத்சிருஷ்டி கர்த்தாவாகிய பிரமன், முதல்முதல் அநிருத்த மூர்த்தியிடத்தே தோன்றின னென்பது மஹா பாரதம் சாந்தி பர்வம்-'அநிருத்தாத்ததாப்ரஹ்மா தந்நாபி கமலோத்பவ: ' (சுநிரஐாதுள்ளுஜாதாவிகe அொஜவ) எனவரும் வாக்யத்தால் அறியப் படுதலான் ஸ்ருஷ்டியினாரம்பமும் இத் தொன்மிகு பெரு மரமாகிய அம்மூர்த்தியின்கண்ணே நிலையுறுவ தாதலால் இயைபு காணலாகும். தேவுமெப் பொருளும் படைக்கப் பூவினான் முகனைப்படைத்த தேவன்'(திருவாய், 2,2,4). என்பதனால் இப்படைப்பின் மூலம் ஸர்வேச்வரனிடத் திலே நிலைபெறுவது என்க. 13. அவன் மகள் முலையிலி=அப்பிரமனுக்கு மகளாய்க் தோன்றிய ஸரஸ்வதி ஸ்தனமில்லையாயினாள் எ-று. பிரமன்தவத்தால் அவன் திருமேனியிற் றோன்றினாள் என்றும், இவள் 'அவனுக்கு மகளேயாகவும் இவளெழி லான் மனங்கவரப்பட்டுக் காமித்தானென்றும், அது கண்டு பிரமபுத்திரராகிய மகருஷிகள் பிரமனை வெறுத்தன ரென்றும் மத்ஸ்யபுராணமும் 'ஸ்ரீபாகவதமும் நன்குவிளக் குதலான், இவள் பிரமனுக்கு மகளேயாதல் தெள்ளிது. தமிழில் மகள் என்பது மனைவிக்கும் பெயராதலின், பின் அவன் இவளை மனைவியாக விழைந்ததற்கும் பொருந்தவே அவன் மகள் என்று ஈண்டுக் கூறப்பட்டது என்பது பொருந்தும். இவளை முலையிலியென்றது, இயலும் இசையுமல்லது வேறு ஸ்தனமில்லாமையா லென உய்த்துணரலாகும். ஸங் கீதமபி ஸாஹித்யம் ஸரஸ்வத்யா: குசத்வயம்” (ഖംഴ് ೭a9 ಮೂಲ[೩೩ಾಂಮೂVITag೨ಾrāಖಖLo) என வரும் வடமொழிவழக்கா னுணர்க. ஸரஸ்வதி ஞானசக்தி என்பது o, I 2}