பக்கம்:அண்டகோள மெய்ப்பொருள்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Յ6 அண்டகோள மெய்ப்பொருள்

டாக்கியபடியால் இங்ஙனங் கூறினர். பிரமதேவனுடைய புத்ரர்கள் பதின்மர் என்பதும், அவர் இவரிவர் என்பதும் ஸ்ரீமத் பாகவதம் 3-ஆம் ஸ்கந்தம் (12–22) மரீசி, ,அத்ரி,அங்கிரஸ்,புலஸ்த்யர்,புலஹர்,க்ரது,ப்ருகு,வசிஷ்டர்,தக்ஷர்,பத்தாமவராகிய நாரதர் என்பதனால் அறிக. இவ ருள் ப்ருகு ,மரீசி,அத்ரி ,அங்கிரஸ் , ,புலஸ்தியர்,புலஹர்,க்ரது என்னும் இவர் சப்த ப்ரஹ்மாக்கள் என்ற ஸ்ரீபாக வதத்தில் (11-14-4) ஒரு தொகையாக வழங்கப்படுதலான் எழுவர் மூவர் எனப் பிரித்துரைத்தார். பத்தினை மூன்றும் எழுமாக எண்ணிக் கோடலும் பண்டை வழக்கே யாகும்.முடிப்போது முன்றேழென் றெண்ணினான்.(மூன்றாந் திருவந் 77)என்று பெரியார் பணித்தலா னறிக பிரமசக்தியாய்ப் பிரமனினைவி லமர்ந்து இப்பதின்மரையுந் தோற்றுவித்தலாற் பயந்தனள் என்றார். 'திதியின் சிறுவர்'என்புழிப்போலச் சிறுவர் என்பது மக்களுக்காயிற்று. உலகத்தை அபிவிர்த்தி செய்யவும், உயிர்கட்கு ஞானோதயஞ் செய்யவும், ஆசாரத்தை அநுஷ்டிப்பித்துக் திருத்தவும் இவரைப் பயந்தனள் என்று கருதிக் கூறினர். * மலர்மிசை முதல்வனு மற்றவ னிடைத்தோன்றி, யுல கிருளகற்றிய பதின்மரும்” எனப் பரிபாடலின் வருவது கொண்டு இதன் உண்மையுணர்க. சிந்தாதேவி (சிலப்பதி காரம்) என்பதும் புலமாமகள் என்பதும் (சிந்தாமணி) இவள் பெயராதலால், பிரமன் நினைவிலமர்தல் அறிக. இப்பதின் மரும் பிரமன் நினைவிற்றோன்றியோர் என்பது விதியின் மக்களும் (பரிபாடல். ௩) என்புழி ஆதிப்பிரமற்கு நினைவிற்றோன்றிய பிரமர் பதின்மருள் எனப் பரிமேலழகர் உரைத்தனாற் உணரலாம். e இனி இரட்டுறமொழிதலான், ஸரஸ்வதியாகிய வித்யா லக்ஷ்மி எழுவர் மூவர் சிறுவரைப் பயந்தனள் என்று