பக்கம்:அண்டகோள மெய்ப்பொருள்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்டகோள மெய்ப்பொருள் 39

பொருள் நீர்மை யாயினும் பொன்னாழி பாடென் றருணீர்மை தந்த வருள்' (58) எனப் பூதத்தார் அருளிச்செயலானறிக. ஸரஸ்வதியே வேத மந்த்ரகாரிணியென்று தக்கயாகப்பரணி உரையாசிரியர் உரைப்பர் (தாழிசை,598). இவற்றாற் பயந்தவள் இவள் என அறிதல் கடனென்றார். இனி நாமங்கையும் அறிந்தோதற்கரிய பொலிவுடையன் இறைவனென்று பாடியருளிய பெரியாரு முண்டு. இதனை 'நாமங்கை தானு கலம்புகழ வல்லளே, பூமங்கை கேள்வன் பொலிவு” (மூன்றாந் திருவந்தாதி, 57) என்பதனால் அறியலாம். தான் நன்கறியாததொன்றை உலகிற்கோதவல்லவள் இவளில்லை யன்றே? ஆதலால் வித்யாலக்ஷ்மியாகிய பூமங்கை தான் தன்கேள்வன்படி உணரவல்லள்: உவள்தான் நம்வினை தீர்த்து அவனை உணர்த்தவல்லள்: ஆதலான் உவளென அறிதல் கடன்' என்றார், இவ்விருவரும் பரமாத்ம சக்தி பேதமாதலின் எங்ஙனம் அறியினும் பயனுண்டென்பது கருத்து. இனி எழுவர் மூவர் சிறுவரைப் பயந்தனள் எவள் அவள் பிரமற்கு மகளென மனையாட்டியென அறிதல் புலவர் கடன் என்றாறென்றலும் ஒன்று. பராசத்தியியல்பு பலபடியாதல் பிறர்க்கு மொக்கும். இதனை அவளத்தனா மகனாந் தில்லையான்'எனத் திருக்கோ வையினும் 'அனகாடற் கெம்மன்னை, மனைவி தாய் தங்கை மகள்' எனச் சிதம்பரச் செய்யுட்கோவையினுங் கூறுதலா லுணர்க. ஸரஸ்வதி பரமாத்மசக்தி யென்பதும் அவள் பிரம னுக்குப் புத்திரியாயினாள் என்பதும் தொன்னூற் றுணிபு. இவ்வாறே மஹாபாரதம் சாந்திபர்வம் மோக்ஷ,தர்மத்தில் 'பிரமாவின் புத்திரியாகிய என்னுடைய ஸரஸ்வதிதேவியா ___________________________________

  • இலக்குமியே வித்யாரூபிணி' என்பது விஷ்ணு புராணம்)