பக்கம்:அண்டகோள மெய்ப்பொருள்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

அண்டகோள மெய்ப்பொருள்ஆகிப்பூத்த பேரெழில் ஒருமை மரம் என இயைக்க, பூத்தமரம் என்பது பூத்தற்குக்காரணமான மரம் என்றவாறு; “தாழ்ந்த இயல்பின்மை”(திருக்குறள்-903)“நிற்புகழ்ந்தயாக்கை” (பதிற்றுப்பத்து, 44, 8) என்புழிப்போல. பிண்டம்—சராசரப்பிராணிகளின் தொகுதி. இவ்வாழ்வார் பாதெய்வத்தைத் தொன்மிகுபெருமரம் என்று வ்ருக்ஷமாக உருவ கப்படுத்துகின்றாராதலின், அதற்கியைய வ்ருக்ஷகாரியத்தாற் பூத்தஎன்று ஏகதேசரூபகமுகத்தாற் பிராணிஸமுதாயத்தை மலர்களாக்கினர். ஸ்ரீ ஸஹஸ்ர நாமத்தில் “புஷ்பஹாஸ” என்னுந் திருநாமத்திற்கு ஸ்ரீசங்கர பகவத்பாதர் “பூவரும்பு மலர்வது போலப் பிரபஞ்சரூபமாக, மலர்பவன்” என்று பொருள் கூறினார். இதனாற் பூத்தது பிரபஞ்சரூப மென்று துணியலாகும். பெருமை-பரமாணுவை அண்டபிண்ட ரூபமான பிரபஞ்சமாக்கிச் செயற்கரிய செய்யும் ஸங்கல்ப விசிஷ்டனாதற் றன்மை. இதனாற் பரதெய்வத்தின் ஸங்கல்ப விசிஷ்டவேஷமே உலகிற்கு நிமித்தகாரணமாதல் காட்டியவாறாம். எழில் - ஞானசக்தியாதி எல்லா நலங்களும் “எழிலளந்தங் கெண்னற் கரியானை” (மூன்றாந் திரு:3) என்று பணிப்பர். [“பூ நலம்”(பரிபாடல்-16) என்புழிப் பரிமேலழகர் பூவினாகிய அழகு எனப் பொருள் கூறலானுமுணர்க.] இதனாற் பரதெய்வத்தின் ஞான சக்தியாதி விசிஷ்டவேஷமே உலகிற்கு ஸஹகாரிகாரணமாதல் காட்டியவாறாம். ஒருமை- அவ்வண்ட பிண்ட ரூபமான பிரபஞ்சத் தோடு கலந்தொன்றாயுள்ள தன்மை. இதனாற் பரதெய்வத்தின் சிதசித்விசிஷ்டவேஷமே உலகிற்கு உபாதான காரணமாதல் காட்டியவாறாம். இங்ஙனம் திரிவித காரணமும் பரதெய்வமேயாகுமென்பது தோன்றப் பேரெழிலொருமை பேரெழிலொருமை-