பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2



படிவுகள்

இதன் அடியில் படிவுகள் படிந்துள்ளன. அவை முதன்மையாகச் சேறு ஆகும். இச்சேறு நிலப்பகுதியிலிருந்து பனி ஆறுகளால் கொண்டு வரப்படுகிறது.

வெப்ப நிலை

ஆர்க்டிக் கடலைவிட இது மிகக் குளிர்ந்த கடல்; ஆழமான கடல். இதிலிருந்து பெரிய பனிப் பாறைகள் வெப்பத் துணைக் கடல்களுக் குச் செல்கின்றன.

இதன் மேற்பரப்பு வெப்ப நிலைகள் ஆண்டு தோறும் 40° F என்னும் அளவில் உள்ளன. அவை அடிக்கடி 28° F அளவுக்கும் வரும். அடிப் பகுதிகளின் வெப்ப நிலைகள் 31° F என்னும் அள வில் இருக்கும்.

பனிக்கட்டி

இது பெரும்பாலும் அடர்ந்த பனிக்கட்டியால் மூடப்பட்டுள்ளது. மாரிக் காலத்தில் முழுக் கட லும் உறைந்து ஒரே பனி வெளியாகக் காட்சி அளிக்கும். பார்ப்பதற்கு எங்கும் பனிக்கட்டி தான் தென்படும். கோடையில் பனிக்கட்டி உருகும்; நீர் மீண்டும் தலைகாட்டும்.

இக்கடல் அனுப்பும் பனிப்பாறைகள் ஆர்க்டிக் கடலின் பனிப்பாறைகளைக் காட்டிலும் மிகப்