உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

இச்சமவெளி, அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் சேர்த்தால் எவ்வளவு பெரியதாக இருக்குமோ, அவ்வளவு பெரியதாக இருக்கும். இக்கண்டம் வட்ட வடிவமானது. ஆஸ்திரேலியாவைவிட இரு மடங்கு பெரியது.

மலை

அண்டார்க்டிக் கண்டம் உலகில் மிகக் குளிர்ந்த கண்டம். இதில் பல மேட்டுச் சமவெளிகளும், உயர்ந்த பனி படர்ந்த மலைகளும் உள்ளன. 15,000 அடி உயரமுள்ள மலைகளும் இங்குக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதிலுள்ள ராஸ் பனித் திட்டு மட்டுமே மிதக்கும்பனிக்கட்டியாலானது. பனிக்கட்டியின் தடிமன் 600-1,000 அடி. இத்திட்டின் பரப்பு பிரான்சின் பரப்பைவிடப் பெரியது. இத்திட்டு கடலை நோக்கி ஒரு நாளைக்கு ஐந்து அடி வீதம் ககர்ங்து கொண்டிருக்கிறது.

இக் கண்டத்தில் இரு எரிமலைகள் உள்ளன. ஒன்று மவுண்ட் எரிபஸ். இதன் உயரம் 13,350 அடி. நிலையான செயலாக்கம் உள்ளது. இதை அடைய முயற்சிகள் நடைபெற்றவண்ணம் உள்ளன; மற்றொன்று மவுண்ட் டொர். இதன் உயரம் 900 அடி. தற்பொழுது இது ஒய்ந்து ஒழிந்துள்ளது.

இதிலுள்ள பனிப்பாறைகளின் அளவு, மிதக்கும் பனிக்கட்டியின் மட்ட உயர்வு ஆகியவற்றி