பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8

லிருந்து இங்கு நில கடுக்கங்கள் நிலவலாம் என்று நம்பப்படுகிறது.

கடற்கரையைச் சுற்றிலும் உலர்ந்த பள்ளத் தாக்குகள் உள்ளன. இங்குப் பனியாறுகள் பின் வாங்கத் தொடங்கியுள்ளன. இருப்பினும், அவற்றில் சில நாக்கு போ ல் பள்ளத்தாக்குகளில் தொங்கிக்கொண்டிருக்கின்றன.

பள்ளத்தாக்குகளின் கரிய தரை முழு அள வுக்கு உலர்ந்தது அல்ல. இத்தரை கதிரவன் வெப்பத்தைப் பெற்றுப் பனியாறுகளை உருக வைக்கின்றன. பெய்யும் பனி தரையை அடை வதற்கு முன்பே ஆவியாகும். சில பள்ளத்தாக்கு களில் பனியா று க ள் வளர்ந்த வண்ணமும் தேய்ந்த வண்ணமும் உள்ளன.

புயல்கள்

இங்குப் புயல்களும் உண்டாகின்றன. அதனால், இதை விரிவாக ஆராய முடியவில்லை. இங்கு அடிக்கும் பயங்கரக் காற்றுகளின் விரைவு மட் டும் 1 மணிக்கு 200 மைல். இங்குக் காந்தப் புயல் களும் அடிக்கின்றன.

ஒளிகள்

கண்ணையும் கருத்தையும் கவரும் பல வண்ண ஒளிகளான தென்முனை ஒளிகள் இங்கு உண்டாகின்றன. வான்வெளிக் கப்பல்களில் செல்வோர் இக்கண்கொள்ளாக் காட்சியைக் கண்டுகளிக்கலாம்.