பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




தட்பவெப்ப நிலை

அங்குப் பருவ காலங்களும் உண்டு. அவை கோடைக் காலமும் மாரிக்காலமும் ஆகும். கோடை குளிர்ந்தது; குறுகியது. மாரி மிகக் குளிர்ந்தது; நீண்டது.

மாரிக் காலத்தில்--70° F வெப்பகி2ல பதி வாகி உள்ளது. இக் காலத்தில் எங்கும் ஒரு நாள் முழுதும் கதிரவனே தலைகாட்டாது. ஆண்டின் எந்த மாதமும் 32° F வெப்ப நிலையில் இருப்ப தில்லை. 32° F என்பது நீர் உறையும் வெப்ப நிலையாகும். பொதுவாக, ஆர்க்டிக் கண்டத்தின் வெப்ப நிலைகளைவிட இக்கண்டத்தின் வெப்ப நிலைகள் 5' குறைவு இவ்வெப்ப நிலைகள் பயிர் கள் வளர்வதற்கு ஏற்றதல்ல.

இங்குப் பணி பெய்தலும் மழை பொழிதலும் மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதன்படி, அவற்றின் அளவு, ஒர் ஆண்டில் 30 அங்குலம் மழை பெய்வதற்குச சமமானது.

நில இயல்நூல் ஆண்டின் பொழுது அண் டார்க்டிக்கில் ஆராய்ச்சி நடைபெற்றது. அந்த ஆராய்ச்சியின் முடிவுகளாவன: உலகம் வெப்பம் அடைந்துகொண்டு வருகிறது. இக் கண்டத்தி லுள்ள பனிக்கட்டி உருகுவதே, வெப்ப உயர் வுக்குக் காரணமாக இருக்கலாம்.