பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11மறைவதற்குப் பல வாரங்கள் ஆகும். இச்செயல் ஆவியாதல் குறைவாக நடைபெறுவதைக் காட்டு கிறது!

உயிர்கள்

மிகக் குளிர்ந்த கண்டமாகையால், உ ய ர் வகைப் பயிரினங்கள் இங்கு வளர்வதில்லை. தாழ்ந்த பயிர் வகைகளான புல், பாசி, லைகன் முதலியவை இங்கு வளர்கின்றன.

விலங்குகளில் பென்குயின் என்னும் பறவை கள் இங்குள்ளன. பூச்சிகளும் உள்ளன. மீன், கடல் நாய், திமிங்கிலம் முதலியவை கடல் விலங் குகள், கரைப் பகுதிகள் திமிங்கில வேட்டைக்குச் சிறந்தவை. உலகின் திமிங்கில விளை பொருள் களில் 90 பங்கு அளவு இங்கிருந்து கிடைக்கிறது. இதனால் அண்டார்க்டிக் கடலில் திமிங்கிலங்கள் அதிகம் என்பது தெரிகிறது.

இது மக்கள் வாழும் இடமாக இன்னும் ஆக வில்லை. விஞ்ஞானிகள் மட்டுமே த ள ங் க ள் அமைத்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

ராஸ் திட்டின் மீது உறைந்த மீன்கள் 1,100 ஆண்டுகாலமாக அதன் மீதே கிடக்கின்றன. நூற்றாண்டுகளுக்கு முன் பனிக் கட்டிக்குக் கீழ் அகப்பட்டுப் பின் மேல் வந்தவை அவை.

கனிவளம்

பனிக்கட்டிக்குக் கீழ் நிலக்கரிப் படிவுகளும், தாதுக்களும் இருப்பதாகக் கருதப்படுகிறது.