பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



12

அவை இனிதான் ஆராய்ச்சி செய்து, தோண்டி எடுக்கப்பட வேண்டும்.

நாடுகள்

இங்கு நிலையான குடியேற்றங்கள் இல்லை. இருப்பினும், நிலப்பகுதியில் பல பிரிவுகள் உண்டு. பிரிட்டன், நார்வே, அமெரிக்கா, உரு சியா முதலியவை இக்கண்டத்தில் அக்கறை காட் டும் நாடுகளாகும்.

ஆராய்ச்சி

இதை ஆராய்ச்சிக்குச் சிறந்த இடமாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பனிக்கட்டி இயக்கம், வானிலை நிலைமைகள், நில அமைப்பு நூல் வரலாறு முதலியவற்றைப் பற்றி இங்கு ஆராயலாம்.

அண்டார்க்டிக் பனிக்கட்டியிலிருந்து அறிய வேண்டியவை அதிகம். அதிக ஆழங்களிலிருந்து அதன் உட்பகுதிகள் வெளிக் கொண்டுவரப்படு கின்றன. இந்த உட்பகுதிகளில் எல்லா வகைத் துகள்களும், இறுகிய காற்றுக் கொப்புளங்களும் காணப்படுகின்றன. இவை இரண்டும் நூற்றாண்டுக் கணக்காகப் பெய்யும் பனியால் பிடிபட்டு உள்ளே சென்றவை.

1883 இல் ஜாவாவில் எரிமலை ஒன்று வெடித்தது. இந்த வெடிப்பில் சாம்பல் வெளித்தள்ளப் பட்டது. இச் சாம்பல் கிரீன்லாந்து பனிக்கட்டியிலும் காணப்படுகிறது. இச் சாம்பல் அண்