பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



20


நோக்கம்

அண்டார்க்டிக் கண்டம் நன்கு ஆராயப் படாத கண்டம். ஆஸ்திரேலியாவை விட இது இரண்டு மடங்கு பெரியது. இருப்பினும், அதன் தரையை யாரும் கடக்கவில்லை. அதன் தரையைக் கடந்து செல்வதும்; செல்லும் பொழுதே பல வகை ஆராய்ச்சிகள் நடத்துவதும் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

வானிலை நூல், பனி நூல், நில அமைப்பு நூல் முதலிய துறைகளில் ஆராய்ச்சிகள் நடந்தன. இவை அண்டார்க்டிக் கண்டத்தின் அறிவை மேலும் பெருக்க உதவி செய்தன.

வரலாறு

1775 ஆம் ஆண்டிலிருந்தே அண்டார்க்டிக் கண்டத்தில் ஆங்கிலேயர் ஆர்வம் காட்டிவர லாயினர். இந்த ஆண்டில் கேப்டன் குக் என்பார் முதன் முதலாக அண்டார்க்டிக் வட்டத்தைக் கடந்தார். அங்குப் பனிக்கட்டிகளுக்கிடையே பாசறை அமைத்துத் தங்கினர்.

19 ஆம் நூற்றண்டின் முற்பகுதியில் ஆங்கிலக் கப்பலோட்டிகள் முதன் முதலில் அண்டார்க்டிக்கில் நிலப்பகுதியைக் கண்டுபிடித்தனர். அதன் கடற்கரையின் எல்லைகளையும் அறிந்தனர்.

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல நாடுகளின் விஞ்ஞானிகளால் தொடர்ந்து பல