பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
22


பயணம்

பயண வழியின் தொலைவு 2,000 மைல். பயணவழி காமன்வெல்த் நிலப்பகுதியிலேயே அமைந்தது. அதாவது வழி வெடல் கடலிலுள்ள வேசல் விரிகுடாவிலிருந்து ராஸ்கடலிலுள்ள மக்மர்டோ சவுண்டுவரை அமைந்திருந்தது.

பயணத்தின் முன்செல்லும் குழு இலண்டனை விட்டு 1955 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கப்பலில் புறப்பட்டது. வெடல் கடலின் பனிக்கட்டியின் வழியாகக் கப்பல் கடினப் பயணத்தை மே ற் கொண்டு வேசல் விரிகுடாவின் கரைகளை 1956 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அடைந்தது.

இங்கு முக்கிய தளம் அமைக்கப்பட்டு, அதற்கு ஷேக்கிள்டன் எனப் பெயரிடப்பட்டது. எட்டுப் பேர் அடங்கிய குழுவினரை இங்கு விட்டு விட்டு, மேற்கொண்டு ஆகவேண்டிய வேலைகளைக் கவனிக்க டாக்டர் பக்ஸ் இங்கிலாந்திற்கு வந்தார். திரும்பவும் 1957 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வேடிக்கிள்டன் தளத்திற்கு வந்தார்.

சர் எட்மண்ட் ஹில்லாரி தம் குழுவினருடன் 1956 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நியூசிலாந்தை விட்டுப் புறப்பட்டார். 1957 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மக்மர்டோ சவுண்டை அடைந்தார்.

வெடல் கடலில் இருந்து பக்ஸ் தம் குழுவின ருடன் கிளம்பினார். ராஸ் கடலில் இருந்து ஹில்