பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



28

யான நிலையங்களை அமைக்கலாம். அன்றியும், ஆஸ்திரேலியா உரிமை கொண்டாடும் பெருநிலப் பகுதியில் உரு சி யா ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றது. நில இயல்நூல் ஆண்டுத் திட்டத்திலிருந்துதான் அண்டார்க்டிக்கில் உருசியா ஆர்வம் காட்டிவருகிறது.

அண்டார்க்டிக்கில் ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளுக்கு அமெரிக்கக் கடற்படை பலவகை யிலும் உதவி செய்து வருகிறது. நேர்முகமாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக அத்துறைக்கு வேண்டிய செய்திகளை ஆராய்ச்சியின் வாயிலாகப் பெறலாம்.

தொடக்க நிலை ஆராய்ச்சியிலிருந்து தெரிய வருவதாவது: அண்டார்க்டிக் வானில் கொடிய கதிர்வீச்சின் மட்ட உயரம் குறைவு. ஆகவே, இங்கிருந்து ம னி த வான் வெளிக் கப்பல்களை ஏவலாம்.

நில இயல்நூல் திட்டத்தின் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு, அண்டார்க்டிக்கில் அமெரிக்கா ஏழு தளங்களை நிறுவிற்று. அவை அண்டார்க்டிக்கின் ஏழு. ந க ர ங் க ள் ' எனப் படுபவை.

மக்மர்டு நிலையம்

அவற்றில் மிகப் பெரியது மக்மர்டு என்னும் நகரமாகும். இது ராஸ்தீவின் கரையில் கட்டப்