பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7. ஆராய்ச்சியின் முடிவுகள்

நில இயல்நூல் ஆண்டில் அண்டார்க்டிக்கில் பன்னிரண்டு நாடுகளால் ஆராய்ச்சி, விரிவாக மேற்கொள்ளப்பட்டது. அ வ் வாராய் ச்சியி ன் முடிவுகள் யாவை என்பதை இனி இறுதியாகக் காண்போம்,

உலகம் வெப்பமடைதல்

வானிலை நூலார், இந்த நூற்றாண்டிலிருந்து உலகம் வெப்பமடைந்து கொண்டு வருகிறது என்று நம்புகிறார்கள். அண்டார்க்டிக்கில் திரட் டிய செய்திகள் அவர்களுடைய நம்பிக்கையை உறுதி செய்கின்றன.

டாக்டர் எச். ஈ. லேண்ட்ஸ்பர்க் எ ன் பார் அமெரிக்க வானிலை நிலையத்தின் இயக்குநர். அவர் கூறுவதாவது : அண்டார்க்டிக்கில் திரட் டிய வெப்பநிலைச் செய்திகள் ஒரு புதுக்கொள் கைக்கு இடமளிக்கிறது. அக்கொள்கை உலகம் வெப்பமடைந்து கொண்டு வ ரு கிற து என்ப தாகும்.

அ வ ர் கூற்றுப்படி உலகம் வெப்பமடை வதற்கு இரு கொள்கைகள் கூறப்படுகின்றன. ஒன்று மாற்றம் மனிதனால் ஏற்படுவது ஆகும். நிலக்கரியும் எண்ணெயும் எரிக்கப்படுகின்றன. அவ்வாறு எரிப்பதால் உண்டாகும் கரிக்காற்று ஒரு படலமாக அமைந்து நிலவுலகினால் வெளி விடப்படும் வெப்பத்தைத் தடுக்கிறது.