பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
32

மற்றொன்று : கதிரவன் கதிர்வீச்சு அதிக மாக உள்ளதால், வெப்பமும் உயர்ந்துள்ளது.

தென் முனையில் வெப்பம்

டாக்டர் ஹெர்பீடு காயின்கஸ் ஆஸ்திரிய நாட்டைச் சார்ந்த வானிலை நூலார். அவர் அண்டார்க்டிக் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். அவர் கூறுவதாவது :

தென் முனைக்கு டிசம்பர் மாதம் நடுக்கோடையாகும், அப்பொழுது அது அதிக அளவு கதிரவன் வெப்பத்தைப் பெறுகிறது. இவ்வாறு உலகில் வேறு எந்த இடமும் வெப்பத்தைப் பெறவில்லை.

கிட்டத்தட்ட 90 பங்கு அளவுக்கு அண்டார்க்டிக் கதிரவன் வெப்பத்தைப் பெறுகிறது. ஆனால், அவ்வெப்பம் பிரதிபலித்தல் மூலம் மீண்டும் இழக்கப்படுகிறது.

பனிக்கட்டியின் மேலடுக்கு நேர்த்தியான மணல் துளிகள் நிறைந்தது. அன்றியும், மிகக் கடினமானது. ஆகவே, வெப்பம் உறிஞ்சப்படுதல் மெதுவாகவே நடைபெறுகிறது.

பனிக்கட்டியின் மேலடுக்குக் கடினமாக இருப்பதால், நடப்பதால் அதன் மீது அடிச்சுவடுகள் விழா. அவ்வாறு விழுந்தாலும், பல வாரங் களுக்கு அவை அப்படியே இருக்கும்; மறையா. இந்நிகழ்ச்சி அண்டார்க்டிக்கில் ஆவியாதல் குறைந்த அளவுக்கு நடைபெறுவதைக் காட்டுகிறது.