பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
34

களின் வழிகளில் திரிபுகள் அல்லது மாற்றங்கள் காணப்படுகின்றன என்று மேற்கூறிய ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வருகின்றது. விண்கதிர்களுக்கு நிலநடுக்கோடு 45° அளவுக்கு மேற்காகச் சாய்ந்து உள்ளது என்பதும் தெரிய வந்தது.

பனிக்கட்டி

அண்டார்க்டிக்கில் 14,000 அடி ஆழம் வரை பனிக்கட்டி இருப்பதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால் உலகிலுள்ள பனி, பனிக்கட்டி ஆகியவற்றின் மதிப்பீடு மாறியுள்ளது. அ ம் மதிப்பீட்டின்படி பனிக்கட்டி 40 பங்கு அளவுக்கு அதிகமாகியுள்ளது. பனிக்கட்டியின் பரிமாணம் கிட்டத்தட்ட 32; இலட்சம் கன மைல்களாக இருந்தது. 45 இலட்சம் கன மைல்களாக மாறியுள்ளது. திருத்தப்பட்ட இம்மதிப்பீடு உலகின் வெப்பம், நீர் ஆகிய இரண்டின் சமநிலையைத் திறம்பட ஆராய உதவும்.

நிலத்தொகுதி அல்ல

அண்டார்க்டிக் கண்டத்தின் பரப்பு 60 இலட்சம் சதுர மைல்கள். அது ஒரு நிலத்தொகுதி அல்ல; தீவுகளும் மலைத்தொடர்களும் அடங்கிய ஒரு தொகுதி. இத்தொகுதி பனி உறைக்குக்கீழ் புதைந்துள்ளது.