பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



8. தென்கடல்

அண்டார்க்டிக் கடலுக்குத் தென்கடல் என்னும் பெயரும் உண்டு. இதன் நீர்கள் பற்றிய முக்கிய இயல்புகள், ஆராய்ச்சி மூலம் வெளியாகியுள்ளன. அவைபற்றி இங்குக் காண்போம்.

குளிர் நீர்கள்

இக்கடலின் நீர்கள் மேலடுக்கு, வெப்ப அடுக்கு, குளிர் அடுக்கு என மூன்று அ டு க் கு களைக் கொண்டவை. இதன் கரைகளில் தோன்றும் குளிர் நீர்கள் அடியில் வடக்கே வரை பரவுகின்றன. நில நடுக்கோட்டுக்கு வடக்கேயுள்ள அட்லாண்டிக் கடலிலும் இந்நீர்கள் காணப்படுகின்றன. இந்நீர்கள் இக்கடற்கரையின் பல பகுதிகளில் தோன்று கின்றன என்று உற்று நோக்கல்கள் உறுதிப் படுத்தியுள்ளன. இவை மாரிக் காலத்தில் கண்டத் திட்டு(continental shelf) சென்று செறிவாகி, அங்கு அடியிலுள்ள நீர்களோடு கலக்கின்றன. இவ்வாறு நடைபெறுவதில் உள்ள பொறி நுட்பம் என்ன என்பது திட்டமாகத் தெரிய வில்லை.

நீரோட்டங்கள்

ஆற்றல் வாய்ந்த அண்டார்க்டிக் வளைய நீரோட்டத்திற்குக் கிழக்குப்பெரு நகர்வு நீரோட்டம் (the great eastern drift) என்று பெயர். ஈர்ப்பைப் பொறுத்துள்ள கடல் மட்டச் சாய்வால், இந் நீரோட்டம் உண்டாகிறது. தெற்குப் பகுதியிலுள்ள மேல் நீர்கள் ஆர்க்டிக் வளைய ஓட்டத்திற்குச்