பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.36

செல்கின்றன. அவை கூடுமிடத்தில் முகப்பு மண்டலம் (frontal zone) உருவாகிறது. இங்கு அண்டார்க்டிக்காவின் இயற்கை எல்லைகள் அமைந்துள்ளதால், இதைப்பற்றி ஆராய அதிக முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரண்டாவது நீரோட்டம் மேற்கு நீரோட்டம் இது அண்டார்க்டிக்கின் கரை கெடுகச் செல்வதாக நம்பப் படுகிறது. இங்கு முழுமையான நீர் ஒட்டம் இல்லை. அதற்குள் இருக்கும் நீர்களே சுற்றிச் சுழன்று கொண்டு இருக்கின்றன. இந்த உள்நீர் ஓட்டங்கள் புயல்களால் உருவாகின்றன. இச்சுழற்சியில் குளிர் நீர் அடியிலிருந்து மேல் வருகிறது. இக் குளிர் நீர் வடக்கேயுள்ள வெப்ப நீர்களுக்குப் பனிக் கட்டிகளையும், பனிப் பாறைகளையும் எடுத்துச் செல்கிறது. .

பனிப் பாறைகள்

இவை தென்கடலின் இயல்புகளில் ஒன்று; கரைகளில் உண்டாகி, வடக்கே சென்று கடலில் கலக்கின்றன. கண்டத்திலிருந்து கனிப் பொருள் களைச் சுமந்து செல்கின்றன. 1965-இல் 160 கி. மீ. நீளமும், 72 கி. மீ. அகலமும் உள்ள பனிப்பாறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது அலாஷெயவ், லீனா ஆகிய விரிகுடாக்களுக்குத் தடையாக இருந்தது. ஆற்றல் வாய்ந்த புயல்கள் அடிக்கும் பொழுது, கண்டத் திட்டு பனிக்கட்டியிலிருந்து (shelf ice) பனிப்பாறைகள் உடைகின்றன.

தவிரப் பனிப் பாறைகளால் க ட லு க் கு க் கொண்டுவரப்பட்ட படிவுகள் 500-1000 கி. மீ.