பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
40

நடைபெறும் போ ரா ட் ட மே அண்டார்க்டிக் வாழ்க்கையாகும். இவ்வாழ்க்கை ஆராய்ச்சியாளர் களுக்கு மட்டுமே உரியது.

சூறாவளிக் காற்றின் விரைவு வினாடிக்கு 40 மீட்டர். பனிப் புயல்களின் விரைவு ஒரு வினாடிக்கு 50 மீட்டர். சில சமயங்களில் அது 60 மீட்டர் விரைவையும் அடையும். காற்றின் விரைவு ஒரு வினாடிக்கு 15 மீட்டர். காற்றழுத்தம் 560 மில்லி மீட்டர், உறை பனி வெப்பநிலை -56°C.

இக்கண்டத்தின் மேற்கே ஆண்டுச் சராசரி வெப்பநிலை 0°F. உள்ளே 400 மைல் சென்றால் -30°F. 900 மைல் சென்றால்-60°F. ஜனவரித் திங்களில் கோடை மிக உச்சமாக இருக்கும். அண் டார்க்டிக்கின் மொத்த மழையளவு ஆண்டுக்கு 4 முதல் 6 அங்குலமாகும்.

தாவரங்கள்

மூன்று பூக்கா தாவரங்களே உள்ளன. ஆல்காக்களும், லைக்கன்களும் காணப்படுகின்றன.

விலங்குகள்

சீல்கள், எம்பரர், அடிலிஸ் பென்குயின் பறவைகள், திமிங்கிலங்கள், அண்டரண்டப் பறவை, கழுகு, புறாக்கள் முதலியவை நீரில் வாழ்பவையே. நிலத்தில் வாழும் முதுகெலும்பு விலங்குகள் இல்லை. சிறகில்லாத சுருள் வால் பூச்சிகள், மற்றும் சிறு பூச்சிகள் பாறைகளுக்குக் கீழ் வாழ்கின்றன. ஷிரிம்ப் என்னும் புரதச்சத்து மிகுந்த விலங்குகள் வெடல் கடலில் நிறைய உள்ளன.