பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
41


படிவுச் சான்று

2 அங்குல நீளமுள்ள தவளை இன விலங்கின் தாடை எலும்பு ஒன்று படிவாக அண்டார்க்டிக் கண்டத்தில் கண்டு பிடிக்கப்படடுள்ளது. 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தென்முனைக்கு அருகிலுள்ள துணை வெப்ப மண்டலக்காடுகளில் வாழ்ந்த விலங்காகும் இது. இப்பகுதியில் ஒரு காலத்தில் முதுகெலும்புள்ள விலங்குகள் வாழ்ந்தன என்பதற்கு இது சான்றாகும். தாவர, விலங்குத் தோற்றமுள்ள படிவுகளும் தென்கடலின் அடிப் பகுதியில் காணப்படுகின்றன.

மலையும் மலைத் தொடர்களும்

அண்டார்க்டிகாவில் நீரில் மூழ்கியுள்ள மலைகள், மலைத்தொடர்கள், வடிநிலங்கள் ஆகியவற்றின் எல்லைகள் ஆராயப்பட்டுள்ளன இரு எரி மலைகளைக் கொண்ட 30-130 மைல் அகலமுள்ள மலை முகடு ஆப்பிரிக்காவின் தெற்கே கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. இம்முகடு 5000 மீட்டர் ஆழங் களுக்கு மேல் உள்ள இகோல்னி விரிகுடாவின் (Igolny Bay) அருகேயுள்ள வடி நிலத்தின் மையத்தில் உளளது.

அண்டார்க்டிக் பெருந்தொகுதி (horst) மலைத் தொடர்களாலானது. இவை அதனைக் கிழக்குக் கண்டம், மேற்குக் கண்டம் எனப் பிரிக்கின்றன.

கிழக்குக் கண்டம் கடல் மட்டத்திற்குமேல் 500-1000 மீட்டர் உயரம் தொடர்ச்சியாக உள்ளது; பனிக்கட்டியால் மூடப்பட்டுள்ளது. பனிக்கட்டி 2-2.5 கி. மீ. தடிமனுள்ளது. அதன் மையத்தில்