பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

காம்பர்ட்சவ் மலைத்தொடர் (Gamburtzev Muntain Range) காணப்படுகிறது. அதன் கிழக்கே தென் முனையிலிருந்து கடற்கரை வரை பள்ளம் ஒன்று உள்ளது. மற்றொரு துணைப் பணியாற்றுக் குழிவு (Subglacial bowl) கம்பர்ட்சவ் மலைக்கு மேற்கே வரை பரவியுள்ளது குயின்மா.ஃட்லாந்திற்கும் (Queen Maud Land) தென் முனைக்கும் இடையே மற்றொரு குழிவு (bowl) இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எண்ணுகின்றனர். இக் கண்டம் ஒரு காலத்தில் மற்றத் தென்கண்டங்களோடு சேர்ந்து இருந்தது.

மேற்கு அண்டார்க்டிக் கண்டமும் பனிக்கட்டியால் மூடப்பட்டுக் கடல் மட்டத்திற்குக் கீழ் 1500 மீட்டர் ஆழத்தில் உள்ளது. மலையுச்சிகளில் சில பனிக்கட்டியைத் தாண்டி, அதற்கு மேலும் வருகின்றன. பனிக்கட்டி உறை உருகுமானால், நீரின் மேற்பரப்பில் ஒரு பெரிய தீவுத் தொகுதி (archipe1lago) தோன்றும். இம்மேற்குக் கண்டம் தோற்றத்தில் எரிமலைச் சார்புடையது. 10 மில்லியன் ஆண்டு களுக்கு முன் தோன்றியது.

அண்டார்க்டிக் கண்டத்தில் பனிக்கட்டி உறைவு உள்ள பகுதி 12 மில்லியன் சதுர கிலோ மீட்டர் என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். சராசரி அதன் தடிமன் 2,200 மீட்டர். மேரி பேர்ஃட்லாந்தில் (Mary Birdland) அது 4 கி.மீ.

நீர் வளம்

அண்டார்க்டிக் பனிக்கட்டி அள விலா நீர் வளம் உடையது. ஓராண்டிற்கு 1,00,000 ஓல்கா ஆறுகள்