பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
44


முதல் அட்லஸ்

அண்டார்க்டிக்கின் முதல் அட்லசைச் சோவியத்து ஒன்றியம் உருவாக்கியுள்ளது. உலக அறிவியலார் திரட்டிய செய்திகளிலிருந்து இப்படம் வரையப்பட்டுள்ளது. தீவுகள், மேட்டுச்சமவெளிகள், மலைத் தொடர்கள், ஏரிகள், பனியாறுகள், புவி முனைகள், நீரோட்டங்கள், வனச்சோலைகள், தீவக்குறை ஆகியவை படங்களில் குறிக்கப்பட் டுள்ளன. அட்லசிலுள்ள படங்கள் பனிக் கண்டத்தை மட்டுமல்லாமல், தென்கடலைச் சூழ்ந்துள்ள பகுதிகளையும் காட்டுகின்றன.

அண்டாக்டிக் சோலைகள்

உயிரற்ற வெண்மையே அண்டார்க்டிக்கை அணி செய்வது. வான ஊர்தியில் செல்லுகின்ற பொழுது இந்த வெண்மைக்கிடையே பனி மூடிய குன்றுகள் தெரியும். கறுத்த மாநிற அல்லது துருப்பிடித்த கறுப்பு நிறமுள்ள பாறை ஒட்டுகள் தெரியும். இவற்றிற்கிடையே பசுமையான குட்டைகளும், ஏரிகளும் கண்ணுக்குப்படும் இவையே அண்டார்க்டிக் சோலைகள். திங்களில் கடல்கள் ' இருப்பது போன்று இவை அண்டார்க்டிக்கில் உள்ளன.