பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

கப்பட்டன. இத்துறையில் முத்திரைப் பணியாற்றியவர் கர்மானீ எனும் முஸ்லிம் ரண வைத்திய வல்லுநராவார்.

இவர் ரண சிகிச்சைக்கான புதிய புதிய நுட்பங்களை கண்டறிந்து பல நூறு அறுவை சிகிச்சைகளைத் திறம்படச் செய்தவர்.

கண் அறுவை சிகிச்சை முறையை முதன் முதல் கண்டறிந்து செயல்படுத்தி வெற்றி கண்டவர் ஜக்கரியா ராஜ் எனும் கண் மருத்துவ வல்லுநராவார்.

மனித உடல் உறுப்புகளிலேயே மிக நுண்மையான பகுதிகளில் கண் பகுதியும் ஒன்றாகும். இதில் அறுவை சிகிச்சை செய்ய இதன் நுட்பமான நுண் நரம்புகளைப் பற்றி முழுமையான அறிவும் திறமையும் இருந்தாலொழிய இப்பணியில் வெற்றி பெற இயலாது.

கண் நரம்பு நுட்பம் அறிந்த முதல் மருத்துவர்

மனிதனின் கண் நரம்புகளைப் பற்றி மிக நுணுக்கமாக ஆராய்ந்து அதன் அனைத்து அம்சங்களைப் பற்றியும் இப்னு சீனா எழுதியுள்ளார், அவர் அன்று எழுதிய கருத்துக்கள் ஆராய்ச்சியைப் பொருத்தவரை இன்றும் சரியானதாகவே அமைந்திருப்பது உண்மையிலேயே வியப்பளிப்பதாயுள்ளது.

இன்றும் பொருந்துப் பார்வை இயக்கம் பற்றிய புத்தறிவு

கண் ஒளியியல் தன்மைகளைப் பற்றி அலி இப்னு ஹைத்தாம் மிகச் சரியாகக் கண்டறிந்தது போன்றே இப்னு சினாவும் பார்வை இயக்கம் பற்றிக் கூறியுள்ள கருத்துக்கள் இன்றும் பொருந்துவனவாகவே உள்ளன. கண்