பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

91


பார்வை இயக்கம் பற்றி முழுமையாகவும் சரியாகவும் ஆய்ந்து கூறிய முதல் அறிவியல் அறிஞரும் இவரேயாவார்.இதே போன்று இருதய அறைகள் பற்றிய ஆராய்ச்சியும் இன்றும் மாற்றமேதும் பெறாததாகவே உள்ளது.

கண்படல உறிஞ்சு அறுவை மருத்துவம்

மருத்துவத்துறை வளர்ச்சியோடு இணைந்து கண் அறுவை மருத்துவமும் வளர்ந்து வந்தது. இதில் புதிய நுணுக்கங்களைக் கண்டறிந்து செயல்படுத்தி வெற்றி கண்டவர் அம்மாத் இப்னு அலி அல் மவ்லீலீயே என்பதவராவார்

கண் படலத்தை உறிஞ்சி எடுக்கும் ஒரு புதுவகை சிகிச்சை நுணுக்கத்தைக் கண்டுபிடித்து முதன் முதலாக அதைச் செயற்படுத்தி வெற்றி கண்டார். மையத்தில் வெற்றிடத்தைக் கொண்ட ஒரு ஊசி மூலம் அவர் கண்படலத்தை உறிஞ்சி எடுக்கும் முறையைக் கையாண்டு வெற்றி பெற்றார். இதே முறையை அடிப்படையாகக் கொண்டே 1846 இல் ஃபிரெஞ்சு நாட்டு மருத்துவ ஆய்வாளரான ப்ளாஞ்சே என்பவர் புத்தாய்வு மூலம் இம்முறையின் சிறப்பை உறுதிப்படுத்தி நிலை நாட்டினார்.

கண்நோய் பற்றிய முதல் மருத்துவக் களஞ்சியம்

மருத்துவ ஆய்வு முயற்சியாக கண் நோய் பற்றிய புதிய ஆய்வுகளும் சிகிச்சை முறைகளும் கண்டறியப்பட்டன இத்துறையில் மிகச் சிறந்த கண் நோய் மருந்துவராக விளங்கியவர் அலீ இப்னு ஈசா எனும் கண்நோய் மருத்துவ வல்லுநராவார் சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு இவர் கண்நோய்களைப் பற்றியும் அவற்றிற்கான சிகிச்சை முறைகளைப் பற்றியும் எழுதியுள்ள நூல் ‘கண நோய் மருத்துவக் களஞ்சியமாக இன்று கண் மருத்து