பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108


அறிவியல் பொற்காலம் கண்ட முஸ்லிம்கள்

இதுவரை கூறியவைகளிலிருந்து அறிவியல் துறைகள் அனைத்தின் வளர்ச்சிக்கான அடிப்படைகளை அமைத்த பெருமை முஸ்லிம் அறிவியல் அறிஞர்களை சாரும் என்பது தெளிவாகிறது. தொடர்ந்து அறுநூறு ஆண்டுகள் அறிவியல் துறைகளின் பொற்காலத்தை உருவாக்கி,அதைக் கண்ணும் கருத்துமாகக் கட்டிக் காத்து வளர்த்தார்கள் என்பதை அறிவியல் வரலாறு நன்றிப் பெருக்கோடு சுட்டிக் காட்டிக் கொண்டுள்ளது.

கார்டோபாவில் இயங்கிய மொழிபெயர்ப்புக் கல்லூரி

முஸ்லிம் அறிவியலறிஞர்களின் ஆராய்ச்சிகளையும் அரிய கண்டுபிடிப்புகளையும் விளக்கிக் கூறும் பல நூறு அரபி மொழி நூல்களை லத்தீன் மொழியிலும் ஹீப்ரு மொழியிலும் மொழி பெயர்ப்பதற்கென்றே ஸ்பெயின நாட்டில் கார்டோபாவில் ஒரு மொழிபெயர்ப்பு கல்லூரியே இயங்கி வந்தது என்ற தகவல் அன்றைய ஐரோப்பா முஸ்லிம் அறிவியலாளர்களின் சிந்தனைகளையும் ஆராய்ச்சிகளையும் அறிந்து கொள்வதில் எந்த அளவுக்கு ஆர்வமும் முயற்சியும் கொண்டிருந்தது என்பதையும் நம்மால் நன்கு உணர முடிகிறது. கார்டோபா மொழிபெயர்ப்புக் கல்லூரி தொடக்கக் காலத்தில் பாக்தாது நகரில் அப்பாஸியக் கலீஃபாலினால் கிரேக்க அறிவியல் நூல்களை அரபி மொழியில் பெயர்க்க அமைக்கப்பட்ட அறிவு இல்லம் (பைத் அல் ஹிக்மா)வை முன்மாதிரியாகக் கொண்டு அமைந்து இயங்கியதெனலாம்.

உலக வரலாற்றிலேயே மொழி பெயர்ப்புக்கென தனி அமைப்பை ஆரம்ப காலத்தில் உருவாக்கி அறிவியல் சிந்தனைகளை இறக்கு ‘மதி’ செய்த முஸ்லிம்களே தங்கள்