பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

காலம்தோறும்
இறைதூதர்

இறுதித் தூதர் நபிகள் நாயகம் (சல்) அவர்கட்கும் முன்னதாக பலப்பல நபிமார்கள் வல்ல அல்லாஹ்வின் இறைதூதர்களாக, உலக மக்களுக்கு இறைவழி காட்ட அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து இருபத்தி நான்காயிரம் என்பர். இவர்களில் சிலர் ஒரு இன மக்களை வழி நடத்தினர்; சிலர் ஒரு நாட்டு மக்களை நல்வழிப்படுத்தினர்; இன்னும் சிலர் ஒரு மொழி பேசிய மக்களுக்கு இறை வழி காட்ட முயன்றனர். இவ்வாறு இந்நபிமார்கள் எல்லாம் எல்லா இனத்திலும் எல்லா மொழியிலும் தோன்றி இறை வழியில் மக்களை வழி நடத்தினர்.

“ஒவ்வொரு வகுப்பினருக்கும் (நம்மால்) அனுப்பப்பட்ட ஒரு தூதர் உண்டு.” (10:47)

“அச்சமூட்டி எச்சரிகை செய்யும் (நம்முடைய) தூதர் வராத எந்த வகுப்பாரும் (பூமியில்) இருக்கவில்லை” (35:24)

இவ்விரு திருமறை வசனங்களிலிருந்தும் உலகெங்கும் உள்ள எல்லா நாடுகளிலும் எல்லா இனததிலும் இறை தூதர்கள் தோன்றி, மக்களை நல் வழிப்படுத்தியிருக்கிறார்கள் என்ற பேருண்மை வெளிப்படுகிறது.

அகவாழ்வும்
புறவாழ்வும்

இந்நபிமார்கள் அனைவருமே ஆன்மீக உணர்வு பொங்கும் அக வாழ்வின் வளத்துக்கே அடித்தளமிட்டு வளர்க்க முனைந்தனர். அகத்தின் சாயலிலேயே புற வாழ்வைக் காணத் தூண்டினர். ஆனால், இறுதி நபியாக வந்துதித்த நம் பெருமானார் முஹம்மது நபி (சல்) அவர்களோ அகவாழ்வைச் செம்மைப்படுத்துவதோடமையாது