பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110


இதைக் குறித்து திமிஷ்கு (டமாஸ்கள் ) பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் முஹம்மது இஃப் ஜாஸுல்கதீப் கூறுகிறார்,

“சட்டமியற்றுதல் பற்றிப் புனிதத் திருமறையாம் திருக்குர்ஆனில் இருநூற்று ஐம்பது திருவசனங்கள் தாம் உள்ளன. ஆனால், இயற்கை பற்றி ஆராயவும் சிந்திக்கவும் அறிவைச் சிறந்த முறையில் பயன்படுத்தவும் அறிவியல் ஆய்வுகளை சமுதாய வாழ்வின் ஒரு முக்கிய அம்சமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பது பற்றி வலியுறுத்தும் திருவசனங்கள் எழுநூற்று ஐம்பது உள்ளன.”

அது மட்டுமல்ல, அகத்துறை பற்றிய ஞானமும் புறத்துறை விஞ்ஞான அறிவும் நிரம்பப் பெற்ற வல்லுநர்களாகிய ஆலிம்களுக்கு இஸ்லாம் உயரிய அந்தஸ்து அளிப்பதும் ஒரு முக்கிய காரணமாகும். அல்லாஹ்வின் படைப்புத்திட்டத்தையும் அதன் உயரிய மேம்பாட்டுத் தன்மை பற்றியும் உயர்வு குறித்தும் ஆழ்ந்து உணர்ந்து தெளியும் அறிவியலாளர்களை - இறை நம்பிக்கையாளர்களான மூமீன்களை நபிமார்களின் வாரிசுகளுடன் ‘வரதத்துல் அன்பியா ; என்னும் பெருமையும் சிறப்புமிகு அடைமொழி தந்து அண்ணலார் அழைத்துச் சிறப்பிப்பதும் ஒரு முக்கியக் காரணமாகும்.

ஆட்சியாளர் அரவணைப்பில் அறிவியல் வளர்ச்சி

அன்றைய முஸ்லிம்களின் அறிவியல் சாதனைகளுக்கு முக்கியக் காரணமாக அமைவது அன்றைய அரசுகளின் போக்கும் அரசை நடத்தியவர்களின் அரவணைப்புமாகும் நாடாண்ட கலீஃபாக்களும் அவ்வப்பகுதிகளை நிர்வகித்தவர்களும் அறிவியல் வளர்ச்சியிலே பேரார்வம் காட்டினார் அதன் வளர்ச்சிக்குத் துணையாக இருப்பதில் பெருமையும் பெருமிதமும் கொண்டனர். அதைத் தங்களின் இன்றியமை