பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

அறிவியல் அறிஞர்களும் ஒருங்கிணைந்து உழைத்துப் பணியாற்றினர்.

இன்னும் சொல்லப்போனால் அன்றைய பேரரசாயினும் சிற்றரசாயினும் நாடு. இனம், நிறம். மொழி போன்ற வேற்றுமை உணர்வுகட்கு அப்பாற்பட்டனவாகவே இயங்கின அறிஞர்களிடமும் ஆய்வாளர்களிடம்மும் மிகுந்த தாராளத் தன்மையோடு அன்றைய அரசுகள் நடந்து கொண்டதை வரலாறு சிறப்புற விளக்குகிறது.

மனிதகுல விஞ்ஞான சாதனைகள் ஜார்ஜ் சார்ட்டனின் பகுப்புமுறை

விஞ்ஞான வரலாற்றாசிரியர்களில் மிகப் புகழ்பெற்ற பேரறிஞராக உலகில் விளங்குபவர் ஜார்ஜ் சார்ட்டான் என்பவராவார். இவரது அறிவியல் வரலாற்று நூல்களுள்‘விஞ்ஞான வரலாற்றுக்கு ஒரு முன்னுரை’ (இன்ரடொக்ஷன் டு தி ஹிஸ்டரி ஆஃப் சயின்ஸ் ) என்ற நூல் குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாகும்.

இதுவரை மனிதர்களால் நிகழ்த்தப் பெற்ற அறிவியல் சாதனைகள் ஒவ்வொன்றையும் அரை நூற்றாண்டு கொண்ட கால கட்டங்களாகப் பகுத்துள்ளார். ஒவ்வொரு அரை நூற்றாண்டு விஞ்ஞான சாதனைகளையும் ஒரு முக்கிய விஞ்ஞானியோடு தொடர்புபடுத்துகிறார்.இவ்வகையில் அவரது விஞ்ஞான சாதனை வளர்ச்சிக்கணக்கெடுப்பு கி.மு. 450-லேயே தொடங்கி விடுகிறது. முதல் கட்டமாக கி.மு. 450 - 400ஐ கிரேக்கப் பெருஞ்சிந்தனையாளர் பிளேட்டோவின் காலமாகக் கணித்துள்ளார். இதைத் தொடர்ந்து விஞ்ஞான சாதனைக்காலக் கட்டங்களாக அரிஸ்டாட்டில், யூக்ளிட், ஆர்க்கிமிடிஸ் ஆகியோர் காலங்களாகக் குறிப்பிடுகிறார். அதன் பின் கி.பி 600 முதல் 700 வரையுள்ள காலத்தை சீனா