பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

விஞ்ஞானத்தோடு இஸ்லாமிய அறிவியல் தொடர்பு அறுந்த நிலையில் தனித் திட்டாகி முழுமையாக பலமிழந்து நலியலாயிற்று.

காலனி ஆதிக்க முடிவும் முஸ்லிம் அறிவியல் எழுச்சியும்

காலப் போக்கில் காலனி ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.அடிமைப்பட்டிருந்த பல முஸ்லிம் நாடுகள் தன்னாட்சியுரிமை பெற்றன. அடிமைப்பட்டிருந்த முடியாட்சிகள் மீண்டும் அரசுரிமை பெற்று தம் போக்கில் இயங்கலாயின.முழு விடுதலை பெற்ற இஸ்லாமிய முடியரசுகளில் குடியாட்சிகள் எழலாயின. எனினும், அவை ஆட்சித் துறையிலும் சமுதாய வளர்ச்சி நிலையிலும் பல மாற்றங்களைக் கண்ட போதிலும் விடுபட்டுப் போன முஸ்லிம் அறிவியல் வளர்ச்சியில் மீண்டும் பழைய வரலாற்றோடு இணையவோ. அத்தொடர்பை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளவோ எவ்வித முயற்சியும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை .

எழுச்சி பெறும் இஸ்லாமிய அறிவியல் போக்கு

மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில் பல எண்ணெய் வளத்தால் பொருளாதாரத் துறையில் மிகுந்த வளமுடையனவாகத் திகழ்ந்த போதிலும் அவை மேலை உலகின் அறிவியல் திறமைகளைப் பயன்படுத்திக் கொள்வதில் காட்டுகின்ற நாட் டத் தில் கால் சதவிகிதம் கூட தங்கள் சொந்த அறிவியல் வளர்ச்சியில் நாட்டம் செலுத்த முயற்சி மேற்கொள்ள விழையவில்லை என்பது மறுக்க முடியாத ஒரு கசப்பான உண்மை. தங்கள் சொந்த நாட்டு மக்களிலிருந்து அறிவியல் வல்லுநர்களை உருவாக்குவதற்கான சிந்தனையிலோ முயற்சியிலோ அண்மைக் காலம்வரை நாட்டம் செலுத்தவில்லை என்றே கூற வேண்டும். அறிவியல்