பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

முஸ்லிம் விஞ்ஞானிகட்கு வாய்ப்பளித்தால் தனித்துவமுள்ள தங்கள் திறமையை வெளிப்படுத்தி அருஞ்சாதனை நிகழ்த்திக் காட்டமுடியும் என்பதற்கு இந்திய விண்வெளி ஆய்வுத் திட்ட இயக்குநராகத் திகழும் ஏவுகணை விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களே தக்க சான்று தமிழ்நாட்டிலுள்ள இராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்த இவர் இன்று ஏவுகணைத் திட்ட பிதாமகனாகத் திகழ்கிறார்.இரண்டாயிரம் கிலோமீட்டர் பாய்ந்து சென்று தாக்கவல்ல ‘பிரித்வி’ ஏவுகணைத் திட்ட வெற்றிக்கு இவரே மூலவராகவும் இன்று விளங்குகிறார்.

இன்று இஸ்லாமிய நாடுகளில் சில. அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியில் பெரும் கவனம் செலுத்தத் துவங்கியதன் விளைவாக மின்னல் வேக வளர்ச்சி பெற்று வருகின்றன. நவீன ஆயுதங்களுக்காக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை நம்பியிருந்த நிலை இன்று வெகுவாக மாறிக்கொண்டு வருகிறது. பாகிஸ்தான் ஈராக், ஈரான், லிபியா போன்ற நாடுகள் அணு ஆயுதங்கள் தயாரிப்பு வரை தங்கள் அறிவியல், தொழில் நுட்பத் திறனை வளர்த்துக்கொண்டு வருகின்றன. எழுச்சி பெற்றுள்ள இவ்விஞ்ஞான முன்னேற்றம் மக்களின் நல்வாழ்வையும் அமைதியையும் அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும் என்பதே அனைவரின் வேணவா . இதே உணர்வில் தான் அன்று நபிகள் நாயகம் (சல்) அவர்கள் அறிவுத்தேடலின் மூலம் அறிவையும் அறிவியல் உணர்வையும் பெறத் தூண்டினார்கள் என்பதை கருத்திலிறுத்திச் செயல்படுவோமாக!

இன்றைய நவீன விஞ்ஞான வளர்ச்சிக்கான ஆழமான அடித்தளங்களை அன்றைய முஸ்லிம்கள் அழுத்தமாக அமைத்துச் சென்றுள்ளார்கள் அதற்கு அடிப்படைக்காரணம் அண்ணலாரின் அறிவுத்தேடல் பணிப்பும்,இஸ்லாமிய மார்க்கம் அறிவியல் பூர்வமான மார்க்கமாகஅமைந்திருப்பதுமே யாகும்.