பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

செய்யப் பயன்படுத்தப்படுவது அக்கால வழக்கம். போர்க்கைதிகள் விடுதலை பெற விரும்பினால் பகரமாகப் பெரும் தொகையைத் தந்துவிட்டு விடுதலை பெறுவர்.

நபிகள் நாயகம் (சல்) அவர்கள் வழக்கமான இம்முறைகளிலும் மாபெரும் புதுமையைப் புகுத்தினார். போர்க் களத்தில் சிறை பிடிக்கப்படும் போர்க்கைதிகளில் கல்வியறிவு பெற்றவர் எவரேனும் இருப்பின் அவர் கல்வியறிவற்ற பத்துப் பேர்களுக்குக் கல்வி கற்பித்தால்,அக்கைதிக்கு விடுதலை கிடைக்கும் என்பதே அப்புதுமை.

இதன் மூலம் கல்வியறிவு பெருகவும் கைதானவர்கள் கல்வி கற்பிக்கும் புனிதப் பணியாற்றுவதன் காரணமாக கண்ணியமாகவும் மரியாதையாகவும் நடத்தப்படவும் வாய்ப்பேற்பட்டது.

சிந்திக்கத் தூண்டும் கல்வி

கல்வியால் பெறும் அறிவின் முழுப்பயனே சிந்திக்கத் தூண்டுவதாகும் மனிதனைச் சிந்திக்கத் தூண்டாத எந்தக் கல்வியும் சிறப்புடைய கல்வியாகாது.

சீனாவுக்குச் சென்றேனும் சீர்கல்வி பெறுக!

முறையாகக் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெறாத பெருமனார் எத்தனையோ வகைகளில் கல்வியின் பெருமையை, அதன் சிறப்பை, சிந்தைகொள் மொழியில் செப்பியுள்ளார். கல்வின் சிறப்பை, அதனைத்தேடிப் பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் பெருமானாரின் புகழ் பெற்ற பொன்மொழி “சீனாவுக்குச் சென்றேனும் சீர் கல்வி பெறுக!” என்பதாகும்.