பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

அச்சுக்கலை தோன்றிய நாடு

விரைந்து அறிவைப் பரப்பும் அருஞ்சாதனமான அச்சுக் கலைத் தொடர்பான அனைத்துக் கண்டுபிடிப்புகளும் அந்நாட்டிலேதான் கால் கொண்டிருந்தன பாள அச்சுமுறை அங்கேதான் உருவாக்கப்பட்டிருந்தது. எழுதுவதற்குதவும் தான் செய்யும் தொழில் நுணுக்கமும் இந்நாளில சீனர்களாலேயே கண்டறியப் பட்டிருந்தது. அச்சிடுவதற்கான மையும் எழுதுகோல் கொண்டு எழுதுவதற்கான மசியும் அந்நாட்டிலேதான் உருவாக்கப்பட்டிருந்தன. இவ்வாறு துரிதமான அறிவு வளர்ச்சிக்கு, கல்விப் பெருக்கத்துக்கு ஆதாரமான அனைத்துக் கண்டுபிடிப்புகளும் ஒருசேர சீனாவில் உருவாக்கப்பட்டதனால உலக அறிவு வளர்ச்சிக்கான ஆதார சுருதியாக அந்நாடு பெருமானாரால் கண்டறியப்பட்டது.

மருத்துவப் புதுமை பொலிந்த நாடு

அறிவுத்துறை வளர்ச்சிக்கு மட்டுமல்லாது உடல்துறைக்கான பலவகையான மூலிலை மருந்துகளும் ‘அக்குபஞ்சர்’ என்று உலகினரால் இன்று வழங்கப்படும் ‘ஊசிகுத்தல்’ மருத்துவமுறையும் அன்றே அங்கு உருவாக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு புதியன புனையும் அறிவியல் அறிவு வளரவும் வளம் பெறவும் அங்கு வாய்ப்பேற்பட்டிருந்ததனால் தான், அறிவு வேட்கை மிக்க ஒவ்வொருவரும், எப்பாடுபட்டேனும் சீனம் சென்று சிறப்பான கல்வியறிவு பெறமுயல்வேண்டும் என அவாவினார் பெருமானார் அவர்கள்.சீன நாட்டைக் குறிப்பாகக் கூறியிருந்தாலும் புதிய புதிய ஆய்வறிவு எங்கெல்லாம் கிடைக்க முடியுமோ அங்கெல்லாம் சென்று புத்தறிவு பெற்று வருக என்பதே அண்ணலாரின் அன்றைய அறைகூவலாகவும் இருந்தது. இதன்மூலம் ஒவ்வொரு முஸ்லிமும் எப்போதும் அறிவு வேட்கை