பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

மிக்கவர்களாக புத்தறிவைச் சேகரித்து, அதன் அடிப்படையில் ஆய்வுச் சிந்தனையுடையவர்களாக விளங்கவேண்டும் என்பதே பெருமானாரின் உள்ளக் கிடக்கையாகும்.

இறைவனால் படைக்கப்பட்ட உயிரினங்களிலேயே உன்னதமான சிறப்புத்தன்மை பெற்றவன் மனிதன். மற்ற உயிரினங்களுக்கு இல்லாத அம் மாபெரும் சிறப்பே சிந்தனையாற்றல்; பகுத்தறியும் பண்பு; ஆய்வுத் திறன் என்பதை முன்பே கூறினோம்.

அளவிட இயலா மனிதத் தேவை

மனிதனைத் தவிர்த்து மற்றைய உயிரினங்களின் தேவை மிகமிகக் குறைவானவைகளாகும். உண்ண உணவு, இருக்க இடம், இனப்பெருக்க முயற்சி இவற்றைத் தவிர வேறு பெரிய தேவைகள் அவற்றிற்கு ஏதும் இல்லை.அத்தேவைகளையும் கூட வெகு எளிதாக அவை பெற்றுப் பயனடையும் வகையில் அவற்றின் கண்ணெதிரிலேயே காணும் வண்ணம் அவற்றை இறைவன் கொடுத்துள்ளான். சிறிதளவு முயற்சியும் உழைப்பும் இருந்தாலே போதும். அவற்றை எளிதாகப் பெற்று பயன் துய்க்க இயலும். சான்றாக, ஆடு, மாடு போன்றவைகட்குத் தேவையான தழையையும் புல்லையும் அவை பார்க்கும் படியாகவே படைத்துள்ளான். உண்டு முடித்தபின் ஓய்வெடுக்கத் தேவையான மரநிழலையும் கண்ணெதிரிலேயே காட்டியுள்ளான் இறைவன் பிற பிராணிகள், விலங்குகளின் நிலையும் இதுவேயாகும்.

மறை பொருளாக உள்ள மனிதத் தேவை

மனிதனின் தேவைக்காக எண்ணிடலங்கா தவற்றை இறைவன் படைத்துள்ள போதிலும் அவற்றை. பிற உயிரினங்களுக்கு