பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

அமையலாயிற்று. ஆன்மீக உணர்வோடு வாழ்வின்அனைத்துத் துறைகளைப் பற்றிய அறிவைப் பெறும் நிலைக்களமாகவும் மதரஸாக்கள் விளங்கலாயின. இதற்கேற்ப நூலகங்களையும் ஆராய்ச்சிக்கூடங்களையும் உள்ளடக்கிய அறிவுப் பூங்காவாக — ஆய்வுக்களமாகமதரஸாக்கள் மாறலாயின. இத்தகைய இஸ்லாமிய மதரஸாக்கள் இல்லாத கிராமமோ நகரமோ இல்லை எனக் கூறும் வகையில் பள்ளி வாசல்கள் தோறும் மதரஸாக்கள் உருவாயின அக வாழ்வுச் செழுமைக்கு இறை வணக்கமும் புறவாழ்வுச் சிறப்படைய ஆய்வறிவும் ஒருங்கிணைந்து பெற இறையில்லங்கள் வழியாயமைந்தன.

எகிப்து கண்காட்சி காட்டும் உண்மை

நான் அண்மையில் எகிப்து நாடு சென்றிருந்தேன்.அப்போது அங்கே இஸ்லாமியப் பண்பாட்டை விளக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்த அருங்காட்சியகம் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். இஸ்லாம் எழுச்சி பெற்ற காலத்தில் இருந்த சூழலை அப்படியேபிரதிபலிக்கும் வகையில் காட்சிகள் ஒழுங்குபடுத்த சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன. அவ்வாறு விரிவாக அமைக்கப்பட்டிருந்த காட்சிக் கூடங்களில் ஒன்று அன்றைய மதரஸா அமைந்திருந்த நிலைமையைக் காட்டும் காட்சிக்கூடம் அதில் உயர்ந்த மேடையொன்று பாடம் புகட்டும் உஸ்தாத் (ஆசிரியர்) அமர்விடமாக அமைக்கப்பட்டிருந்தது அவர் முன்பாக மாணவர்கள் வளைவட்ட வரிசையாக அமர்ந்து பாடங்கேட்பது போல் அமைக்கப்பட்டிருந்தது. அக்கூடத்தின் ஒரு புறத்தில் (மாணவர்கள் படித்துப் பயனடைய அருமையான நூலகப் பகுதி ; அக் கூடத்தின் மற்றொரு புறத்தில் ஆய்வுக்கூடம். இத்தகைய சூழலைக் காணும் போது அக்கால மதரஸாக்கள் மார்க்கக கல்வியை மட்டும் வழங்காது வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்துக் கல்வியையும் அறிவையும் அளிக்கும் அறிவாலயமாகவே விளங்கி