பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

அரசியல் மாற்றங்களால் எகிப்து நாடு பன்முறை அலைக்கழிக்கப்பட்ட போதிலும் அல்-அஸ்ஹர் பல்கலைக் கழகம் எவ்விதப் பாதிப்புக்கும் ஆளாகாமல் தன் பணியை கருமமே கண்ணாயினராகத் தொடர்வது ஒருவகையில் உலக அதிசயமாகவும் தோன்றியது. தன் அடிப்படை நோக்கத்திற்குக் குந்தகம் ஏற்படா வண்ணம் காலத்தின் போக்குக்கும் தேவைக்கும் ஏற்ப பற்பல புதிய புதிய துறைகளை உருவாக்கிக் கொண்டே தொடர்கிறது இப்பல்கலைக் கழகம்

பழமைக்கும் பழமையாய் புதுமைக்கும் புதுமையாய்

பல்கலைக் கழக வளாகத்தில் புதிது புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் பல்கலைக் கழக கட்டிடங்களில் இடம்பெற்றிருக்கும் பல்வேறு துறைகளின் எண்ணிக்கை என்னை வியக்கச் செய்வதாயிருந்தது. ஆயிரமாண்டுக்கால பழமையும் இன்றைய புதுமையும் கைகோர்த்து நிற்பதைக் கண்டு யாரும் வியக்காமலிருக்க முடியாது.

அன்று இட்ட அடித்தளம்

இன்று அறிவியலில் எத்தனை துறைகள் உண்டோ அத்தனை துறைகளும் அல்-அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் இஸ்லாமிய நெறியோடு இணைத்துக் கற்பிக்கப்படுகின்றன என்றால் இத்துறைகளுக்கான அடித்தளக் கரு ஆயிரத்து இருநூறு ஆண்டுகளாக இந்த இஸ்லாமியப் பல்கலைக்கழத்தில் இருந்து வருவதன் விளைவுதான் என்பதில் என்ன ஐயம்?

அறிவியல் மார்க்கமே இஸ்லாம்

இஸ்லாம் அறிவியல் அடிப்படையைக் கொண்டமார்க்கமாக இருப்பதும் அல்-அஸ்ஹர் பல்கலைக் கழகத்தின்

2